டிசிஎஸ் நிறுவனத்தில் மதமாற்ற விவகாரம்: தலைமறைவாக இருந்த நிடா கான் கைதானது எப்படி?

டிசிஎஸ் நிறுவனத்தில் மதமாற்ற விவகாரம்: தலைமறைவாக இருந்த நிடா கான் கைதானது எப்படி?
Updated on
1 min read

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் நிறு​வனத்தில் 2021 முதல் பிராசஸ் அசோசி​யேட்​டாகப் பணியாற்றி வந்த நிடா கான், சக ஊழியர்​களுக்கு இஸ்​லாமிய மதப் புத்​தகங்​கள் மற்​றும் வீடியோக்​களை அனுப்பி அவர்​களை மதமாற்​றம் செய்​யத் தூண்​டிய​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த விவ​காரத்​தில் ஏற்​கெனவே நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதையடுத்​து, நிடா கான் தலைமறை​வா​னார். அவரை பிடிக்க மும்பை மற்​றும் நாசிக் போலீ​ஸார் இணைந்து அதிரடி வியூ​கம் வகுத்​தனர். சத்​ரபதி சம்பாஜி நகரின் நரே​கான் பகு​தி​யில் உள்ள கைசர் காலனி​யில் ஒரு வாடகை வீட்​டில் அவர் பதுங்கி இருப்​ப​தாக ரகசி​யத் தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, கடந்த 3 முதல் 4 நாட்​களாக அந்​தப் பகுதி​யைப் போலீ​ஸார் சாதாரண உடையில் ரகசி​ய​மாகக் கண்காணித்து வந்​தனர்.

போலீஸ் ஜீப்​பு​களுக்​குப் பதிலாகத் தனி​யார் வாக​னங்​களைப் பயன்​படுத்​தினர். சுமார் 20-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் அந்த வீட்டைச் சுற்​றி​லும் மாறு​வேடத்​தில் முகாமிட்​டிருந்​தனர். நிடா கான் தனது தந்​தை, தாயுடன் அந்த வீட்​டில் தங்​கி​யிருப்​பதை தொழில்​நுட்ப ஆய்​வு​கள் மூலம் போலீ​ஸார் உறுதி செய்​தனர். உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் கோரி மனுத் தாக்​கல் செய்ய அவர் திட்​ட​மிட்​டிருந்த நிலை​யில், முன்​கூட்​டியே செயல்​பட்ட போலீ​ஸார் வீட்​டைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட நிடா கான், நேற்று முன்தினம் நள்ளிரவு நீதிபதி​யின் இல்​லத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். விசா​ரணைக்​காக அவரை நாசிக் அழைத்​துச் செல்ல போலீ​ஸாருக்கு நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது.

டிசிஎஸ் நிறுவனத்தில் மதமாற்ற விவகாரம்: தலைமறைவாக இருந்த நிடா கான் கைதானது எப்படி?
“அமமுக எம்எல்ஏ ஆதரிப்பதாக போலி கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியது தவெக” - காமராஜ் உடன் தினகரன் பேட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in