கணவருடன் கருத்து வேறுபாடு: தொலைக்காட்சி துணை நடிகை தற்கொலை

கணவருடன் கருத்து வேறுபாடு: தொலைக்காட்சி துணை நடிகை தற்கொலை
Updated on
1 min read

சென்னை: கணவருடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால் வேதனை அடைந்த துணை நடிகை அதி​கள​வில் மாத்​திரைகளை சாப்​பிட்டு தற்கொலை செய்து கொண்​டுள்​ளார்.

சென்னை சைதாப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் ராஜேஸ்வரி (39). தொலைக்​காட்சி தொடர்​களில் துணை நடிகை​யாக நடித்து வந்த இவர் திரு​மண​மாகி முத்​தி​யால்​பேட்​டை​யில் வசித்து வந்​தார்.

ராஜேஸ்​வரிக்​கும் அவரது கணவருக்​கும் இடையே நீண்ட நாட்​களாக கருத்து வேறு​பாடு இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் சில தினங்​களுக்கு முன்​னர் கணவன் - மனை​விக்கு இடையே தகராறு ஏற்​பட்​ட​தாம்.

இதனால் கணவரிடம் கோபித்​துக் கொண்டு ராஜேஸ்​வரி சைதாப்​பேட்​டை​யில் உள்ள தனது தாய் வீட்​டுக்கு சென்​றுள்​ளார். கணவரிடம் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக கடும் மன உளைச்​சலில் ராஜேஸ்​வரி இருந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு ராஜேஸ்​வரி தனது தாய் வீட்​டில் இருந்​த​போது அதிக அளவில் மாத்​திரைகளை சாப்​பிட்​டு, தற்கொலைக்கு முயன்று மயங்​கி​னார். அவரது பெற்​றோர் உடனடி​யாக ராஜேஸ்​வரியை மீட்டு அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

அங்கு முதலுதவி அளிக்​கப்​பட்ட நிலை​யில், மேல் சிகிச்​சைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்ட நிலை​யில், ராஜேஸ்​வரி நேற்று காலை உயி​ரிழந்​தார்.

கணவருடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக ராஜேஸ்​வரி தற்கொலை செய்து கொண்​டா​ரா? அல்​லது வேறு ஏதேனும் காரண​மா? என்ற கோணத்​தில் சைதாப்​பேட்டை போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

கணவருடன் கருத்து வேறுபாடு: தொலைக்காட்சி துணை நடிகை தற்கொலை
இடதுசாரி அணி தனியாக உருவாக வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in