இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி: கேரள எஸ்ஐ மகனை பத்திரமாக மீட்ட போலீஸார்

இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி: கேரள எஸ்ஐ மகனை பத்திரமாக மீட்ட போலீஸார்
Updated on: 
1 min read

சென்னை: கேரள மாநில காவல் துறை​யில் எஸ்​ஐ-​யாக பணி​யாற்றி வரும் ஒரு​வர் நேற்று அதி​காலை 1.20 மணி​யள​வில் தமிழக காவல்​துறை கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்​டார்.

அப்​போது பதற்​றத்​துடன் பேசிய அவர், தனது மகன் அனந்த கிருஷ்ணன் (25) சென்​னை​யில் தங்​கி, துரைப்​பாக்​கம் பகு​தி​யில் தனி​யார் செயலி மூலம் வாடகை கார் ஓட்டி வரு​வ​தாக தெரி​வித்​தார்.

மேலும், தனது மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்​த​தாக​வும், அந்த காதல் தோல்​வியடைந்​த​தால் மனமுடைந்த நிலை​யில் இருப்​ப​தாக​வும், தற்​கொலை செய்து கொள்​ளப்​போவ​தாக இன்​ஸ்​டாகி​ராமில் வீடியோ ஒன்றை பதி​விட்​டிருப்​ப​தாக​வும், அவரை எப்​படி​யா​வது காப்​பாற்ற வேண்​டும் என்​றும் கண்​ணீர் மல்க போலீ​ஸாரிடம் கோரிக்கை விடுத்​தார்.

மேலும்,அனந்த கிருஷ்ணன், கடலில் குதித்து தற்​கொலை செய்து கொள்​ளப்​போவ​தாக தெரி​வித்​து புகைப்​படம் ஒன்​றை​யும் இன்ஸ்டாகிராமில் பதி​விட்​டிருந்​தார். அந்த புகைப்​படத்​தை​யும், அவரது தந்தை சென்னை போலீ​ஸாருக்கு உடனடி​யாக அனுப்பி வைத்​தார்.

கேரள போலீஸ் அதி​காரி அனுப்​பிய புகைப்​படத்தை ஆய்வு செய்​த​போது, அந்த புகைப்​படம் பட்​டினப்​பாக்​கம் சீனி​வாசபுரம் கடற்​கரை பகு​தி​யைச் சேர்ந்​தது என்​பது தெரிய​வந்​தது. உடனடி​யாக பட்​டினப்​பாக்​கம் பகு​தி​யில் இரவு ரோந்து பணி​யில் இருந்த போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

அவர்கள் கடற்​கரை பகு​தி​யில் தேடியபோது தனி​யாக நின்று கொண்​டிருந்த ஒரு இளைஞரை விசா​ரித்​தனர். அவர் கேரள போலீஸ் அதி​காரி​யின் மகன் அனந்த கிருஷ்ணன் என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவரை போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். பின்​னர் அவரிடம் உரிய விசா​ரணை நடத்​தி, அவரது பெற்​றோருக்கு தகவல் தெரி​வித்​தனர். தொடர்ந்​து, அவரது நண்​பர் ஷாஜிமொலா​னா​விடம், அனந்த கிருஷ்ணன் பாது​காப்​பாக ஒப்​படைக்​கப்​பட்​டார்.

அதி​காலை 1.20 மணிக்கு கேரள போலீஸ் அதி​காரி அளித்த தகவலின் அடிப்​படை​யில் தேடு​தல் வேட்டை தொடங்​கிய போலீ​ஸார் சுமார் 3 மணி​யள​வில் அனந்த கிருஷ்ணனை பத்​திர​மாக மீட்​டனர்.

இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி: கேரள எஸ்ஐ மகனை பத்திரமாக மீட்ட போலீஸார்
வெற்றி பயணம் திட்டத்தில் இணைத்து மானியம் தர கோரி தனியார் பேருந்துகள் நாளை வேலை நிறுத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in