2 மூதாட்டிகளை கொன்று பணம், நகை கொள்ளை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

2 மூதாட்டிகளை கொன்று பணம், நகை கொள்ளை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
Published on

புதுக்கோட்டை: புதுக்​கோட்டை மாவட்​டம் பொன்​னம​ராவதி அருகே 2 மூதாட்​டிகளை கொன்​று, நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்​டனை விதித்து புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றம் நேற்று முக்கியத் தீர்ப்​பு வழங்கியு்ள்ளது.

பொன்​னம​ராவதி அருகே உள்ள வளை​யப்​பட்டி கைலாசபதி வீதி​யைச் சேர்ந்​தவர் விஸ்​வ​நாதன் மனைவி வள்​ளி​யம்மை (72). கருப்​பையா மனைவி சரஸ்​வதி (66). சகோ​தரி​களான இரு​வரும் ஒரே வீட்​டில் வசித்து வந்​தனர். கடந்த 2014-ம் ஆண்டு சரஸ்​வ​திக்கு சொந்​த​மான நிலம் ரூ.10 லட்​சத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

இந்​தப் பணத்​தில் சரஸ்​வ​தி​யின் நாத்​த​னார் நாகம்மை பங்கு கேட்​டுள்​ளார். ஆனால், அதற்கு சரஸ்​வதி மறுத்​துள்​ளார். இதுகுறித்து தனது உறவினர் தொட்​டி​யம்​பட்​டியைச் சேர்ந்த வி.சென்​னியப்​பனிடம் (40) தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, பணத்தை திருட சென்​னியப்​பன் ஏற்​பாட்​டின்​படி, மேலூர் அருகே காம​ராஜ் நகரைச் சேர்ந்த ஏ.மணி என்ற குமார், கச்​சி​ரான்​பட்​டி வி.அருண்​ பிர​சாத், ஆர்​.கணேசன், சேலம் ஜலகண்​டபுரத்​தைச் சேர்ந்த மணி என்ற டி.மணி​கண்​டன், ராஜ​பாளை​யம் சின்​னான்​பட்​டியைச் சேர்ந்த ஆர்​.​யுவ​ராஜ் ஆகியோர் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

அதன்​படி, 2014 அக்​.16-ம் தேதி இரவு வள்​ளி​யம்​மை, சரஸ்​வதி ஆகியோரை வெட்​டிக் கொலை செய்​தனர். பின்​னர், ரூ.9.97 லட்​சம், 6 கிராம் நகை ஆகிய​வற்றை கொள்ளை​யடித்​து ​விட்​டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பொன்​னம​ராவதி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சென்​னியப்​பன், மணி என்ற குமார், அருண்​பிர​சாத், மணி​கண்​டன், யுவ​ராஜ், கணேசன் ஆகிய 6 பேரை​யும் கைது செய்​தனர்.

புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்ட இந்த வழக்​கில் நீதிபதி கனக​ராஜ் நேற்று தீர்ப்​பளித்​தார். அதில், சென்​னியப்​பன், குமார், அருண்​பிர​சாத், மணி​கண்​டன், யுவ​ராஜ் ஆகிய 5 பேருக்​கும் மூதாட்​டிகளை கொலை செய்த குற்​றத்​துக்கு தலா இரட்டை ஆயுள் தண்​டனை, சதித் திட்​டம் தீட்​டிய குற்​றத்​துக்​கும், கூட்​டுக்கொள்ளை அடித்த குற்​றத்​துக்​கும் தலா ஒரு ஆயுள் தண்​டனை விதித்து உத்​தர​விட்​டார்.

மேலும், சென்​னியப்​பன் தவிர மற்​றவர்​களுக்கு இரவில் வீடு புகுந்த குற்​றத்​துக்கு தலா 10 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இந்த தண்​டனை​களை ஏககாலத்​தில் அனுபவிக்க வேண்​டும் எனவும் உத்​தர​விடப்​பட்​டது. குற்​றம் நிரூபிக்​கப்​ப​டாத​தால் கணேசன் விடு​தலை செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் அரசு வழக்​கறிஞர் யோகமலர் ஆஜரா​னார். வழக்கை முறை​யாக வி​சா​ரணை செய்த பொன்​னம​ராவ​தி போலீ​ஸாரை எஸ்​.பி. அபிஷேக்​ குப்​தா பா​ராட்​டி​னார்​.

2 மூதாட்டிகளை கொன்று பணம், நகை கொள்ளை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருச்சி | விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 14 வயது பள்ளி சிறுவன் கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in