இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியிடம் பாலியல் சீண்டல்: சென்னையில் சவுண்ட் இன்ஜினீயர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியிடம் பாலியல் சீண்டல்: சென்னையில் சவுண்ட் இன்ஜினீயர் கைது
Updated on
1 min read

சென்னை: எட்​டாம் வகுப்பு மாண​வி​யிடம் பாலியல் சீண்டலில் ஈடு​பட்​ட​தாக சவுண்ட் இன்​ஜினீயர் கைது செய்யப்​பட்​டுள்​ளார்.

விருகம்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் சுப்​பிரமணி (27). படிப்பை முடித்​து​விட்டு சவுண்ட் இன்​ஜினீயர் ஆக பணி​யாற்றி வரு​கிறார்.

இவருக்கு இன்​ஸ்​டாகி​ராம் மூல​மாக 8-ம் வகுப்பு படிக்​கும் சிறுமி​யின் நட்பு கிடைத்​தது. தொடர்ந்து பழகி வந்த அவர் காதலிப்​ப​தாக சிறுமி​யிடம் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.

இதனை நம்​பிய, அந்த சிறுமியை சுப்​பிரமணி அவரது வீட்​டுக்கு அழைத்து பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டுள்​ளார். உடனே சிறுமி அங்​கிருந்து வெளி​யேறி பெற்​றோரிடம் இது தொடர்​பாக தெரி​வித்​துள்​ளார்.

அதிர்ச்​சி​யடைந்த சிறுமி​யின் பெற்​றோர் இந்த விவ​காரம் தொடர்​பாக விரு​கம்​பாக்​கம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்து போக்சோ உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து புகாருக்​குள்​ளான சுப்​பிரமணியை போலீ​ஸார் கைது செய்​தனர்​.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியிடம் பாலியல் சீண்டல்: சென்னையில் சவுண்ட் இன்ஜினீயர் கைது
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா, ............... அரசியலா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in