கமுதி அருகே மாமியாரை கொலை செய்த மருமகன் - உடந்தையாக இருந்த மகளும் கைது

வாசுகி, ஹேமலதா, உதயகுமார்

வாசுகி, ஹேமலதா, உதயகுமார்

Updated on
1 min read

ராமநாதபுரம்: கமுதி அருகே மாமியாரை கொலை செய்த மருமகன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மகள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கமுதி அருகே பீட்டர்புரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மனைவி வாசுகி(43). இவருக்கு ஹேமா(20), ஹேமலதா(19) என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஹேமா திருமணமாகி கடலாடி அருகே வசித்து வருகிறார்.

இளைய மகள் ஹேமலதா முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமாரை(23) காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர் பொதிகுளத்தில் வசித்து வந்த நிலையில், சில நாட்களாக பீட்டர்புரத்தில் தாய் வாசுகி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் உதயகுமார் தினமும் குடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் இருந்ததை வாசுகி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வாசுகிக்கும் மகள் ஹேமலதா, மருமகன் உதயகுமார் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது உதயகுமார் கோடாரியால் வாசுகியை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளதாக தனது அக்கா ஹேமாவுக்கு ஹேமலதா தகவல் சொல்லியுள்ளார்.

ஹேமா வந்து பார்த்தபோது தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பேரையூர் காவல் நிலையத்தில் ஹேமா புகார் அளித்தார். அதனையடுத்து போலீஸார் உதயகுமார், ஹேமலதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

<div class="paragraphs"><p>வாசுகி,&nbsp;ஹேமலதா,&nbsp;உதயகுமார்</p></div>
சிங்கப்பூரில் அனைத்துலக தமிழ் நாடக திருவிழா: ஆக.28-ல் ‘காற்றினிலே வரும் கீதம்’ - சிறப்புக் காட்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in