தந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு பைக்கில் பின்தொடர்ந்த மகன் விபத்தில் உயிரிழப்பு

தந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு பைக்கில் பின்தொடர்ந்த மகன் விபத்தில் உயிரிழப்பு
Updated on
1 min read

பூந்​தமல்லி: விபத்​தில் காயமடைந்த தந்​தையை சிகிச்​சைக்​காக ஆம்​புலன்​ஸில் ஏற்​றி​விட்டு பைக்​கில் பின்​தொடர்ந்து சென்ற மகன் சாலை விபத்​தில் உயி​ரிழந்​தார்.

அரக்​கோணம் அடுத்த கடம்​பநல்​லூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் அருண்​(39). இவர் பூந்​தமல்லி அருகே வரத​ராஜபுரம் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பணிபுரிந்து வந்​தார். இந்​நிலை​யில் அருணின் தந்தை ஏழு​மலை சாலை விபத்​தில் படு​காயமடைந்​தார்.

ஆகவே அருண் தன் தந்​தைக்கு தான் பணிபுரி​யும் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிப்​ப​தற்​காக நேற்று முன்​தினம் அவரை ஆம்​பு லன்​ஸில் ஏற்​றி​விட்​டு, பின் தொடர்ந்து மோட்​டார் சைக்​கிளில் சென்று கொண்​டிருந்​தார்.

பூந்​தமல்லி அருகே ஜமீன் ​கொரட்​டூர் பகு​தி​யில், பூந்​தமல்​லி-​திரு​வள்​ளூர் சாலை​யில் சென்​ற​போது, கட்​டுப்​பாட்டை இழந்த மோட்​டார் சைக்​கிள், சாலையோர ஆஞ்​சநேயர் கோயில் சுற்​றுச் சுவரில் மோதி​யது. இதில் தூக்கி வீசப்​பட்ட அருண் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இச்​சம்​பவம் குறித்து ஆவடி போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவுசெய்து வி​சா​ரித்து வரு​கின்​றனர்​.

தந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு பைக்கில் பின்தொடர்ந்த மகன் விபத்தில் உயிரிழப்பு
சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் 34 மின் மோட்டார்கள் பறிமுதல்: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in