சோமாஸ்கந்தர் சிலை தங்கம் முறைகேடு வழக்கு: 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

சோமாஸ்கந்தர் சிலை தங்கம் முறைகேடு வழக்கு: 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: ஏகாம்​பர​நாதர் கோயிலுக்கு சோமாஸ்கந்தர் சிலை செய்​த​தில், தங்​கம் முறை​கேடு செய்​த​தாகத் தொடரப்​பட்ட வழக்​கில், குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள இந்து சமய அறநிலை​யத்​துறை அதி​காரி​கள் உள்பட 9 பேருக்கு குற்​றப்​பத்​திரிகை நகல் வழங்​கப்​பட்​டது.

காஞ்​சிபுரம் ஏகாம்​பர​நாதர் கோயி​லில் இருந்த 1,200 ஆண்​டு​கள் பழமை​யான சோமாஸ்கந்தர் உற்​சவர் சிலை சேதமடைந்​த​தாகக் கூறி, 2015-ம் ஆண்​டில் புதிய சிலைகள் செய்​யப்​பட்​டன.

இதற்​காகப் பக்​தர்​களிடம் இருந்து பல கிலோ தங்கம் மற்​றும் பணம் வசூலிக்​கப்​பட்​ட​தாகத் தெரி​கிறது. ஆனால், புதி​தாகச் செய்​யப்​பட்ட சோமாஸ்கந்தர், ஏலவார்​குழலி அம்​மன் ஆகிய இரு சிலைகளி​லும் தங்கம் சேர்க்​கப்​பட​வில்லை எனப் புகார் எழுந்​தது.

சிலைகளில் தங்கம் இல்லை: இது தொடர்​பாக, முன்​னாள் ஐ.ஜி. பொன்​.​மாணிக்​கவேல் தலை​மையி​லான சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யின் போது, அவர்​கள் நடத்​திய சோதனை​யில், புதிய சிலைகளில் தங்கம் சிறிதும் இல்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இது தொடர்​பாக, இந்து சமய அறநிலை​யத் துறை முன்​னாள் ஆணை​யர் வீரசண்​முகமணி, கூடு​தல் ஆணை​யர் கவிதா உள்பட 9 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​தனர். பின்​னர், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இந்த வழக்கை சிவ​காஞ்சி போலீ​ஸார் விசா​ரித்து வந்​தனர். இந்​தச் சூழ்​நிலை​யில், இந்த வழக்கு காஞ்​சிபுரம் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்போது, இந்து சமய அறநிலை​யத்​துறை முன்​னாள் ஆணை​யர் வீரசண்​முகமணி, தற்​போதைய கூடு​தல் ஆணை​யர் கவிதா உள்பட 9 பேரும் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​யினர்.

அவர்​களுக்கு வழக்​கின் 300-க்​கும் மேற்​பட்ட பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரிகை நகல்​கள் வழங்​கப்​பட்​டன. இதையடுத்து, இந்த வழக்​கின் அடுத்​தக்​கட்ட விசா​ரணை ஜன. 5-ம் தேதிக்கு ஒத்​திவைக்​கப்​பட்​டது.

புதி​தாகச் செய்​யப்​பட்ட இரு சிலைகளி​லும் மொத்​தம் 8.7 கிலோ தங்கம் இருக்க வேண்​டும் என்​பதும், அதில் முறை​கேடு நடந்​துள்​ளது என்​றும் அப்​போது விசா​ரணை நடத்​திய சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வின் குற்​றச்​சாட்​டாக இருந்​தது.

விசா​ரணை மீது அதிருப்தி: இதன் அடிப்​படை​யிலேயே வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. ஆனால், சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வின் விசா​ரணை மீது அதிருப்தி அடைந்த சென்னை உயர்​நீ​தி​மன்​றம், இந்த வழக்கை மீண்​டும் சிவ​காஞ்சி போலீ​ஸார் விசா​ரிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டது. இதன் அடிப்​படை​யில், இந்த வழக்கை சிவ​காஞ்சி போலீ​ஸார் தற்போது வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

சோமாஸ்கந்தர் சிலை தங்கம் முறைகேடு வழக்கு: 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா இன்று தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in