திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா இன்று தொடக்கம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா இன்று தொடக்கம்
Updated on
1 min read

திருத்தணி: ​திருப்​பு​கழ் திருப்​படித் திரு​விழா திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் இன்று காலை தொடங்கு​கிறது. திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்தணியில் அமைந்​துள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் டிச. 31 மற்​றும் ஜன. 1-ம் தேதி ஆகிய 2 நாட்​கள் திருப்​பு​கழ் திருப்​படித் திரு​விழா நடை​பெறு​வது வழக்​கம்.

அவ்​வகை​யில், இந்​தாண்​டுக்​கான திருப்​பு​கழ் திருப்​படித் திரு​விழா, இன்று (31-ம் தேதி) காலை தொடங்​கு​கிறது. நாளை (1-ம் தேதி) வரை, 2 நாட்​கள் நடை​பெற இருக்​கிற இத்​திரு​விழா​வில், இன்று காலை 8 மணி​யள​வில், திருத்தணி மலை​யடி​வாரத்​தில் சரவணப் பொய்கை அருகே உள்ள கோயி​லின் முதல் படி​யில், திருப்​பு​கழ் திருப்​படி பூஜை தொடங்​கு​கிறது.

படி​யில் மஞ்​சள் குங்​குமம் பூசி வெற்​றிலை பாக்​கு, பூக்​கள், பழங்​கள் வைத்து கற்​பூரம் ஏற்றி தேங்​காய் உடைத்​து, திருப்​பு​கழ் பாடலுடன் நடை​பெற உள்ள இந்த பூஜை, மலை​யடி​வாரம் முதல், கோயில் வரை உள்ள 365 படிகளி​லும் நடை​பெற உள்​ளது. நாளை மாலை வரை இந்த திருப்​படி பூஜை நடை​பெற உள்​ளது.

மேலும், இத்​திரு​விழா​வில், இன்று காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாக​னத்​தி​லும், நாளை இரவு 8 மணிக்கு தங்​கத் தேரிலும் சுப்​பிரமணிய சுவாமி வீதி உலா சென்​று, பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்க உள்​ளார். திருப்​பு​கழ் திருப்​படித் திரு​விழாவை முன்​னிட்​டு, இன்று காலை முதல் நாளை காலை வரை, கோயில் வளாகத்​தில் பல்​வேறு குழு​வினர்​களால் திருப்​பு​கழ் பாடல்​கள் தொடர்ந்து பாடப்பட உள்​ளது.

கோயில் நடை திறப்பு: அது​மட்​டுமின்​றி, இன்று காலை முதல், நாளை இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்​திருக்​கும் என, திருத்தணி சுப்​பிரமணி​ய சுவாமி கோயில்​ நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா இன்று தொடக்கம்
கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவோம்..! | மார்கழி மகா உற்சவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in