வியாபாரிகளிடம் 45 கிலோ வெள்ளிக் கட்டிகள் மோசடி: சென்னையில் இளம்பெண் உட்பட 3 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

வியாசர்பாடியில் வியாபாரிகளிடம் 45 கிலோ வெள்ளி கட்டிகளை மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சவுகார்பேட்டை, சின்ன நாயக்கன் தெருவை சேர்ந்த திலீப் குமார் (44) என்பவர் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவர், வியாசர்பாடியில் வெள்ளிப் பட் டறை நடத்தி வந்த முருகன் என்பவரிடம் வெள்ளிக் கட்டிகளைக் கொடுத்து, பொருட்களை செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் வெள்ளி சொம்பு உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்காக 30.5 கிலோ வெள்ளிக் கட்டிகளை முருகனிடம் திலீப் குமார் ஒப்படைத்துள்ளார். இதேபோல், ஆசிப் என்ற மற்றொரு வியாபாரியும் 15 கிலோ வெள்ளிக் கட்டிகளை முருகனிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், முருகன் உயி ரிழந்தார். இதைத் தொடர்ந்து, திலீப் குமாரும் ஆசிப்பும் தாங் கள் கொடுத்த 45.5 கிலோ வெள்ளிக் கட்டிகளை திருப் பித் தருமாறு முருகனின் மனைவி தனலட்சுமி (31), முருகனின் அண்ணன் சதீஷ் குமார் (39) மற்றும் தனலட்சுமியின் தந்தை வேதாச்சலம் (61) ஆகியோரிடம் கேட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் வெள் ளியை திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில், யானைகவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முருகன் இறந்த பிறகு, பட்டறையில் இருந்த 45.5 கிலோ வெள்ளிக் கட்டிகளை மூவரும் விற்றுள்ளனர். அந்த பணத்தில் கடனை அடைத்து புதிய கார் வாங்கி சொகுசாக செலவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனலட்சுமி. சதீஷ்குமார் மற்றும் வேதாச்சலம் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in