தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்த அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகளில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 3, 4 மற்றும் 5-வது அலகுகள் மூலம் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று 5-வது அலகில் உள்ள டர்பை னில் பழுது ஏற்பட்டதால் 5-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 அலகுகளை யும் சேர்த்து 630 மெகா வாட் மின்சார் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது.

ஐந்தாவது அலகில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
‘என்டிஏ’வுக்கு சேதாரமா? - ராமதாஸ், சசிகலா கூட்டணி ‘அஜெண்டா’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in