

சேலையூர்: சேலையூர் அருகேயுள்ள குடிசைப் பகுதியில் வசித்து வரும் மோகன் ராஜ் (29), கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்பெண்ணுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். கோகன் ராஜ், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது. இது குறித்து மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் பள்ளியில் ஆசிரியரிடம் மாணவி நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோகன் ராஜ் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.