திருவள்ளூர் | 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

திருவள்ளூர் | 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
Updated on
1 min read

திருவள்ளூர்: சென்​னை, அம்​பத்​தூர் பகு​தி​யைச் சேர்ந்த 11 வயது சிறு​வன், கடந்த 2024-ம் ஆண்டு தன் வீட்​டருகே உள்ள கடைக்கு சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, அம்​பத்​தூர், ஒரகடம் பகு​தி​யைச் சேர்ந்த பிரேம்​கு​மார் (27), சிறு​வனை மிரட்​டி, கடத்திச் சென்று தனது வீட்​டில் பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அறிந்த சிறு​வனின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், சென்​னை, அம்​பத்​தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

வழக்கு விசா​ரணை திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. அரசு தரப்​பில் வழக்​கறிஞர் புவனேஸ்​வரி ஆஜராகி வாதாடி​னார். முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில், பிரேம்​கு​மார் மீதான குற்​றம் நிரூபண​மாகியது.

இதையடுத்​து, நேற்று முன் தினம் மாலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற உமா மகேஸ்​வரி தீர்ப்பு அளித்​தார். அதில், பிரேம்​கு​மாருக்​கு, சிறு​வனை மிரட்டி கடத்​திய குற்​றத்​துக்கு 7 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும் ரூ.10 ஆயிரம் அபராதம், சிறு​வனை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​திய குற்​றத்​துக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

இந்த தண்​டனை​களை பிரேம்​கு​மார் ஏக காலத்​தில் அனுபவிக்க வேண்​டும் என உத்​தர​விட்ட நீதிப​தி, பாதிக்​கப்​பட்ட சிறுவனுக்கு ரூ.3 லட்​சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்​துரைத்​துள்​ளார்​.

திருவள்ளூர் | 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாகவத மேளா நாட்டிய நாடகம் மெலட்டூரில் தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in