

சவுகார்பேட்டையில் நகை கடை அதிபர் வீட்டில், ரூ.5.25 லட்சம், 25 பவுன் நகை திருடி சென்ற வீட்டு பணியாளர், உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை, சவுகார்பேட்டை, முல்லா சாகிப் தெருவை சேர்ந்தவர் சம்பத்ராஜ் (66). இவரும், இவரது மகன் பிரமோத் மேத்தாவும் இணைந்து என்எஸ்சி போஸ் சாலை யில் நகை கடை நடத்தி வருகின்றனர். இருவரும் அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்து வருகின்றனர். இந் நிலையில், சம்பத் ராஜ் நேற்று காலை பெரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு, தனது மனைவியை சிகிச்சைக்காக அழைத் துச் சென்றுள்ளார். வீட்டின் சாவியை பணியாளரான, பீகார் மாநிலத்தை சேர்ந்த மோனுவிடம் கொடுத்து விட் டுச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, சம்பத்ராஜின் மகன் பிரமோத், பணியாளர் மோனுவுக்கு போன் செய்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார். அப் போது, மோனு உங்கள் வீட்டில் பணியாற்றும் ராஜேஷ் குமார் உறவினரை பார்க்கச் செல்ல வேண்டும் எனக் கூறினார். அவருக்கு ரேபிடோ பைக் டாக்சி புக்கிங் செய்து கொண்டிருக்கிறேன் என பதில் அளித்துள்ளார். பத்து நிமிடம் கழித்து மீண்டும் மோனுவுக்கு பிரமோத் போன் செய்தபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனை யில் இருந்து இரவு சம்பத் ராஜும், அவரது மனைவியும் வீட்டுக்கு வந் தனர். அப்போது, குடியிருப்பு வளாக காவலாளி, உங்கள் வீட்டு பணியாளர் மோனு வீட்டு சாவியை என்னிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். சாவியை வாங்கிக் கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.5.25 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகை ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
9 மாதத்திலேயே கைவரிசை:
இது தொடர்பாக, ஏழு கிணறு காவல் நிலையத்தில் சம்பத் ராஜ் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பத் ராஜின் வீட்டு பணியாளர் மோனோ, அவரது மகன் பிரமோத் வீட்டில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இருவரும் சேர்ந்து நகை, பணத்தை திருடி சென்ற தாக போலீஸார் தெரிவித்தனர். வேலைக்கு சேர்ந்த 9 மாதத்திலேயே கைவரிசை காட்டிய மோனோ மற்றும் ராஜேஷ் குமார் இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.