

சைபர் குற்றங்களால் பணத்தை இழந்த பொது மக்களின் புகார்கள் மீது சென்னைகாவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு மற்றும் 4 மண்டலங்களில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ரூ.1.04 கோடி பணத்தை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில், மத்திய குற்றப்பிரிவில் 65, தெற்கு மண்டலம் 50, வடக்கு மண்டலம் 21, கிழக்கு மண்டலம் 30, மேற்கு மண்டலம் 26 என மொத்தம் பெறப்பட்ட 192 புகார் மனுக்களில், 88 மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு. மொத்தம் ரூ.1,04,87,793 பணம் மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2025 ஜன.1ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை ஓர் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த மாக ரூ.25,97,01,176 பணம் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் இணையவழி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, மிகுந்த கவனத்துடன், நம்பகத் தன்மையை உறுதி செய்த பின்னரே ஈடுபட வேண்டும் என்றும், ஏதேனும் சைபர் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற அவசர எண்ணை அழைக்கலாம் என்றும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.