அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: தஞ்சையைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது

அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: தஞ்சையைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது
Updated on: 
1 min read

சென்னை: தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்​சித் துறை சார்​பில் கிராமப்​புறங்​களில் அடிப்​படை சுகாதார வசதி​களை மேம்படுத்துவதற்​காக செயல்​படுத்​தப்​படும் 15-வது நிதிக்​குழு சுகாதார மானியத் திட்​டத்​துக்​கான நிதி சென்​னை​யில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்​கி​யின் ஒருங்​கிணைப்​புக் கணக்​கில் பராமரிக்கப்​பட்டு வந்​தது.

இந்த நிலை​யில், கடந்த அக்.12 முதல் 30-ம் தேதி வரை நாகப்பட்டினம் மாவட்​டம் கீழையூர், ராம​நாத​புரம் மாவட்​டம் மண்டபம், திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்​களின் அங்​கீகரிக்​கப்​பட்ட அலு​வலர்​களின் பயனர் விவரங்​களை முறைகேடாகப் பயன்​படுத்தி, 46 பரிவர்த்​தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை 25 வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்றி சைபர் குற்​றவாளி​கள் மோசடி செய்​துள்​ளனர்.

இது​குறித்த புகாரின்​பேரில் சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு சைபர் க்​ரைம் போலீ​ஸார் கடந்த நவ.3-ம் தேதி வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். இதில், மோசடி செய்யப்பட்ட பணம் பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களில் வரவு வைக்கப்​பட்டு, பின்​னர் ரொக்​க​மாக எடுக்​கப்​பட்​டதுடன், மற்ற வங்​கிக் கணக்குகளுக்​கும் மாற்​றப்​பட்​டது தெரிய​வந்​தது.

இது​தொடர்​பாக சென்னை செல்​லப்​பாண்​டியன், அசோக் மல்லு, நரேஷ் அத்​வானி, கரும்​பூர் அண்​ணாதுரை, பெங்​களூரு லோகநாதன், மதுரை அப்​துல் ரஹ்​மான், ஜெகதீஷ், சிவகங்கை அஷ்ரஃப் அலி, கண்​ணதாசன் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோசடிக்​காகவே பயன்​படுத்​தப்​படும் ‘மணி மியூல்’ வங்​கிக் கணக்​கு​கள் மூலம் பணம் மாற்​றப்​பட்​டதும் தொடர் விசாரணையில் கண்​டறியப்​பட்​டது. அந்த கணக்​கு​களு​டன் தொடர்​புடைய நபர்​களைக் கண்​டறிய வெளி மாநிலங்​களில் 3 தனிப்​படை​யினர் தீவிர தேடுதல் வேட்​டை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், தஞ்​சாவூரைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இதன்​மூலம் கைது செய்​யப்​பட்​டோர் எண்ணிக்கை 14 ஆக அதி​கரித்​துள்​ளது.

அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: தஞ்சையைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது
ரூ.87 லட்சம் வாடகை பாக்கி: நுங்கம்பாக்கத்தில் கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்பு

X