ரூ.4 ஆயிரம் லஞ்சம்: சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது
Updated on: 
1 min read

தாம்பரம்: பட்டா அளவீடு மற்​றும் பெயர் திருத்​தம் செய்​வதற்​காக மனு​தா​ரரிடம் ரூ.4,000 லஞ்​சம் பெற்​ற​தாக சிட்​லப்​பாக்​கம் வருவாய் ஆய்​வாளர் பிர​சாந்தை லஞ்ச ஒழிப்​புத் துறை போலீஸார் நேற்று கைது செய்​தனர்.

தாம்​பரம் அருகே செம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த மனோஜ்குமார் என்​பவர், தனக்​குச் சொந்​த​மான நிலத்தை அளவீடு செய்​து, அதில் தவறாக குறிப்​பிடப்​பட்​டிருந்த தனது தந்தை​யின் பெயரைத் திருத்தி பட்டா வழங்​கக்​கோரி தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் மனு அளித்​திருந்​தார்.

இந்த மனுவைப் பரிசீலித்து மேல் நடவடிக்​கைக்​குப் பரிந்​துரை செய்​வதற்​காக சிட்​லப்​பாக்​கம் வரு​வாய் ஆய்​வாளர் பிர​சாந்த் ரூ.5,000 லஞ்​சம் கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. பின்​னர் ரூ.4,000 கொடுத்​தால் போதும் என அவர் ஒப்​புக்​கொண்​ட​தாக தெரி​கிறது. மேலும் நேற்று மதி​யம் 12 மணி​யள​வில் பணத்தை வழங்​கு​மாறு மனோஜ் குமாரிடம் கூறி​யுள்​ளார்.

இதையடுத்து மனோஜ் குமார், லஞ்ச ஒழிப்​புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்​தார். போலீ​ஸாரின் அறிவுறுத்தலின்படி, அவர் கிழக்​குத் தாம்​பரம் ஆதிநகரில் உள்ள வரு​வாய் ஆய்​வாளர் அலு​வல​கத்​தில் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பிர​சாந்​திடம் வழங்​கி​னார்.

அப்​போது அங்கு மறைந்​திருந்த லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார், பணத்​தைப் பெற்ற பிர​சாந்தை கையும் களவு​மாகப் பிடித்​தது கைது செய்​து,விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் தரும் அறிக்​கையை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்​யப்​படலாம் என வரு​வாய்த் துறை​யினர்​ தெரிவித்தனர்.

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது
சென்னை: 5 மின்சார ரயில் சேவையில் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in