இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு போலீஸாரிடம் சரணடைந்த ரவுடி

இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு போலீஸாரிடம் சரணடைந்த ரவுடி
Updated on: 
1 min read

தென்காசி: திருந்தி வாழ விரும்புவதாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி ஒருவர், போலீஸில் சரணடைந்தார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் காசித்துரை தலைவனார் (24). இவர் மீது புளியங்குடி, சிவகிரி, வாசுதேவநல்லூர் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் காசித்துரை வெளியிட்ட வீடியோவில், “நான் திருந்தி மக்களுடன் வாழ விரும்புகிறேன். குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ, புளியங்குடி காவல் ஆய்வாளர் ஆடிவேல் வாய்ப்பு தருவதாக அறிந்தேன். அதனால் நானும் திருந்தி வாழ விரும்பி, தானாக முன்வந்து சரணடைகிறேன்” என்று கூறி இருந்தார். அதன்படியே, நேற்று பிற்பகலில் ரவுடி காசித்துரை புளியங்குடி காவல் நிலையத்துக்கு வந்து போலீஸாரிடம் சரணடைந்தார்.

இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு போலீஸாரிடம் சரணடைந்த ரவுடி
‘திமுக கூட்டணியில் தான் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்’ - பிரேமலதா தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in