பாமக பிரமுகரை கொன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு: போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது நடவடிக்கை

போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பூவரசன்.

போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பூவரசன்.

Updated on: 
1 min read

வேலூர்: குடி​யாத்​தம் அருகே முன்​விரோத தக​ராறில் பாமக பிர​முகரை நாட்​டுத் துப்​பாக்​கி​யால் சுட்டுப் கொலை செய்த ரவுடி, போலீ​ஸாரை தாக்​கி​விட்டு தப்ப முயன்​றபோது துப்​பாக்​கி​யால் சுட்டு பிடிக்​கப்​பட்​டார்.

வேலூர் மாவட்​டம் குடி​யாத்​தம் அடுத்த சேங்​குன்​றம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஞானவேல் (46). பாமக​வில் வேலூர் மேற்கு மாவட்ட அன்​புமணி தம்​பிகள் படை​யின் மாவட்டச் செய​லா​ளராக இருந்​தவர். இவர் குடி​யாத்​தம் கிராமிய காவல் நிலை​யத்​தில் சரித்​திர பதிவேடு குற்​றவாளி​கள் பட்​டியலில் இருந்​தார்.

இவருக்​கும் அதே பகுதி​யைச் சேர்ந்த ரவுடி பூவரசன் (29) என்​பவருக்​கும் முன்​விரோதம் இருந்​துள்​ளது. நேற்று முன்​தினம் மாலை இரு​வருக்​கும் ஏற்​பட்ட தக​ராறில் நாட்டு துப்​பாக்​கி​யால் பூவரசன் சுட்​டதில் ஞானவேல் சம்​பவ இடத்​திலே உயி​ரிழந்​தார். உடன் இருந்த ரகு (40) படுகாயம் அடைந்​தார். இது​குறித்த தகவலின்​பேரில் குடி​யாத்​தம் கிராமிய காவல் நிலைய போலீ​ஸார் விரைந்து சென்று நாட்​டுத் துப்​பாக்​கி​யுடன் பூவரசனை கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், சேங்​குன்​றம் கிராமத்​தில் உள்ள மலை​யடிவார பகுதி​யில் நாட்டு துப்​பாக்​கிக்​கான மருந்து உள்​ளிட்​ட​வற்றை பறி​முதல் செய்​வதற்​காக பூவரசனை போலீ​ஸார் பலத்த பாது​காப்​புடன் நேற்று காலை அழைத்​துச் சென்​றனர். அங்கு, மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால், எஸ்ஐ ராஜாவை வெட்​டி​விட்டு தப்ப முயன்ற பூவரசனை கிராமிய காவல் நிலைய ஆய்​வாளர் தமிழ்​செல்​வன் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தார்.

இதற்​கிடை​யில், குடி​யாத்​தம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்ட எஸ்ஐ ராஜாவை, வேலூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சிவ​ராமன் சந்​தித்து ஆறுதல் தெரி​வித்​தார். பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பூவரசன் பயன்​படுத்​திய நாட்டு துப்​பாக்​கிக்​கான மருந்​துகளை பதுக்​கிவைத்த இடத்தை காணச் சென்​றபோது மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் பூவரசன் திடீரென தாக்​கியதில் எஸ்ஐ ராஜாவுக்கு கையில் பலத்த காயம் ஏற்​பட்​டது. காவலர் இம்​தி​யாஸ் லேசான காயமடைந்​தார். தப்பி ஓட முயன்ற பூவரசனை ஆய்​வாளர் தற்​காப்​புக்​காக முதலில் வானத்தை நோக்​கி​யும், இரண்​டாவ​தாக காலில் சுட்​டுப் பிடித்​தார்” என்​றார்.

<div class="paragraphs"><p>போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பூவரசன்.</p></div>
தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X