சென்னை | இரும்பு கம்பியால் தாக்கி ரவுடி கொலை

சென்னை | இரும்பு கம்பியால் தாக்கி ரவுடி கொலை
Updated on
1 min read

சென்னை: புது​வண்​ணாரப்​பேட்​டை, பூண்டி தங்​கம்​மாள் தெரு, குடிசை​மாற்று வாரிய குடி​யிருப்பு பகு​தி​யில் நேற்று காலை இளைஞர் ஒரு​வர் மர்​ம​மான முறை​யில் இறந்து கிடந்​தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்​பகுதி மக்​கள் உடனடி​யாக இதுகுறித்​து, காசிமேடு மீன்​பிடி துறை​முகம் போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தனர். இதையடுத்​து, போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து இளைஞரின் உடலை கைப்​பற்றி பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், சடல​மாக கிடந்​தவர் புது​வண்​ணாரப்​பேட்​டை, பூண்டி தங்​கம்​மாள் தெருவை சேர்ந்த நரேஷ்கு​மார் (24) என்​பதும், பிரபல ரவுடி குள்ள கார்த்​திக்​கின் கூட்​டாளி என்​பதும் தெரிய வந்​தது.

இவர் மீது புது​வண்​ணாரப்​பேட்​டை உள்​ளிட்ட காவல் ​நிலை​யங்​களில் குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​பதும் தெரிய​வந்​தது. நரேஷ் குமாரின் முன்​பக்க நெற்​றி​யில் பலத்த காய​மும், வலது பக்க மணிக்​கட்​டில் வீக்​க​மும் இருந்​தது.

இதனால், இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்​களால் தாக்கி அவர் கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் என போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர். இதுகுறித்து, போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்னை | இரும்பு கம்பியால் தாக்கி ரவுடி கொலை
சின்னத்திரை நடிகைக்கு பாலியல் வன்கொடுமை: தனியார் நிறுவன உரிமையாளர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in