சின்னத்திரை நடிகைக்கு பாலியல் வன்கொடுமை: தனியார் நிறுவன உரிமையாளர் கைது

ஷேக் முத்​தலீப்

ஷேக் முத்​தலீப்

Updated on
1 min read

சென்னை: டி.வி நடிகைக்கு மயக்க குளிர்​பானம் கொடுத்து பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக, தனி​யார் நிறுவன உரிமை​யாளர் ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டார்.

இதுதொடர்​பாக, போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: சென்​னை, கே.கே.நகர் பகு​தி​யைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒரு​வர் சினிமா மற்​றும் தொலைக்​காட்சி தொடர்​களில் சிறிய வேடங்​களில் நடித்து வரு​கிறார். கணவரை பிரிந்​த அவருக்கு கடந்​தாண்டு ஷேக் முத்​தலீப் (46) என்​பவர் அறி​முக​மா​னார்.

மேற்கு வேளச்​சேரியைச் சேர்ந்த அவர், தனி​யார் நிறு​வனம் நடத்தி வரு​வ​தாக​வும் தெரி​வித்​தார். மேலும், எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்​பாளர்​கள், இயக்​குநர்​களிடம் கூறி உங்​களுக்கு சினி​மா​வில் முன்​னணி நடிகர்​களு​டன் நடிக்க வாய்ப்​பு​கள் பெற்​றுத் தரு​கிறேன் என்று ஆசை​வார்த்தை கூறி நடிகை​யுடன் நெருக்​க​மாகி உள்​ளார்.

இந்​நிலை​யில், சில மாதங்​களுக்கு முன்​னர் முத்​தலீப், தனது நண்​பருடன் சேர்ந்​து, சினிமா வாய்ப்பு மற்​றும் விருது தொடர்​பாக பேச வேண்​டும் எனக்கூறி நடிகை​யை, மது​ராந்​தகம் அருகே உள்ள விடு​திக்கு அழைத்​துச் சென்​று குளிர்​பானத்​தில் மயக்க மருந்து கலந்து கொடுத்​து, பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக​வும், அதை செல்​போனில் வீடியோ​வாக பதிவு செய்து வைத்​துக் கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

பின்​னர், ஆபாச வீடியோவை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடு​வேன் என மிரட்டி ரூ.2 லட்​சம் ரொக்​கம், 11 பவுன் தங்க நகைகளை முத்​தலீப், அவரது நண்​பர் பறித்​துள்​ளனர்.

மிரட்​டல் அதி​கரித்​த​தால் சம்​பந்​தப்​பட்ட நடிகை, இது தொடர்​பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​து, முத்​தலீப்பை கைது செய்தனர். அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>ஷேக் முத்​தலீப்</p></div>
எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in