சேலத்தில் ரவுடி படுகொலை: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

டேவிட் உதயகுமார்

டேவிட் உதயகுமார்

Updated on: 
1 min read

சேலம்: பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய ரவுடியை, மக்​கள் நட​மாட்​டம் உள்ள பகுதி​யில் மர்ம கும்​பல் படுகொலை செய்த சம்​பவம் சேலத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சேலம் ஜங்​ஷன் ஸ்​டேட் பாங்க் காலனியைச் சேர்ந்​தவர் டேவிட் உதயகுமார் (45). இவர் மீது கொலை உட்​பட பல்​வேறு வழக்​கு​கள் உள்​ளன. நேற்று காலை ஜங்​ஷனில் இருந்து புதுரோடு மேம்​பாலத்​தில் டேவிட் உதயகுமார் இருசக்​கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, மூன்று இருசக்​கர வாக​னங்​களில் வந்த 5 பேர் கொண்ட கும்​பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்​டியது. அவர்​களிடம் இருந்து தப்பி ஓடியபோதும் அந்த கும்​பல் விரட்​டிச் சென்று வெட்​டியது. இதில் படுகாயமடைந்த டேவிட் உதயகுமார் சம்​பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

டேவிட் உதயகுமார் மீது நில மோசடி தொடர்​பாக மத்​திய குற்​றப்​பி​ரிவு காவல் நிலை​யத்​தில் வழக்கு உள்​ளது. உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெற்ற டேவிட் உதயகுமார், மத்​திய குற்​றப்​பி​ரிவு காவல் நிலை​யத்​தில் கையெழுத்​திட்டு வரு​கிறார். நேற்று கையெழுத்​திட வந்​த​போது​தான் அவரை மர்ம கும்​பல் வெட்​டிக் கொலை செய்​துள்​ளது. கொலை சம்​பவம் நடந்த இடத்​தில் உள்ள சிசி​டிவி காட்​சிகளை கைப்​பற்​றிய ஆய்வு செய்த போலீ​ஸார், கொலை​யாளி​களை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>டேவிட் உதயகுமார்</p></div>
“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in