கண்காணிப்பு கேமராக்களை அணைத்து விட்டு திருவொற்றியூர் துணிக்கடையில் கத்திமுனையில் கொள்ளை: 5 பேர் கைது

கண்காணிப்பு கேமராக்களை அணைத்து விட்டு திருவொற்றியூர் துணிக்கடையில் கத்திமுனையில் கொள்ளை: 5 பேர் கைது
Updated on: 
1 min read

சென்னை: திருவொற்றியூர் துணிக்​கடை​யில் கண்​காணிப்பு கேம​ராக்​களை அணைத்​து​விட்டு, கத்​தியை காட்டி மிரட்டி துணிகளைக் கொள்​ளை​யடித்த வழக்​கில் 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை திரு​வொற்​றியூர் பாரதி நகர், டி.எச். சாலை பகுதி​யில் குடும்​பத்​துடன் வசித்து வருபவர் வசந்​த​ராஜ் (31). இவர் திரு​வொற்​றியூர் இரட்​டைமலை சீனிவாசன் முதல் தெரு​வில் துணிக்​கடை நடத்தி வரு​கிறார்.

கடந்த 17-ம் தேதி மதி​யம் வசந்​த​ராஜ் கடை​யில் இருந்​த​போது, அங்கு வந்த 4 பேர் துணி வாங்​கு​வது போல் நடித்​துள்​ளனர். பின்​னர், கடை​யில் இருந்த கண்​காணிப்பு கேம​ராக்​களை அணைத்​து​விட்டு, துணிகளை எடுத்​துள்​ளனர்.

இதைத் தடுக்க முயன்ற வசந்​த​ராஜை கத்​தி​யைக் காட்டி மிரட்​டியதுடன், தாக்​கிய​தாகவும் கூறப்​படு​கிறது. பின்​னர், கடைக்கு வெளியே 2 இருசக்​கர வாக​னங்​களு​டன் தயாராக நின்​றிருந்த கூட்​டாளி​களு​டன் சேர்ந்து அவர்​கள் தப்​பிச் சென்​றனர்.

இது​குறித்து திரு​வொற்​றியூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கத்​தி​முனை​யில் துணிகளை அள்ளிச் சென்றது தண்​டை​யார்​பேட்டை, கிராஸ் ரோடு பகுதி​யைச் சேர்ந்த ஜெயகுமார் (23), எண்​ணூர் எஸ்விஎம் நகரைச் சேர்ந்த ரமேஷ்குமார் (29), அதே பகுதி திரு​வள்​ளுவர் தெரு​வைச் சேர்ந்த சஞ்​சய்​குமார் (23), விஜய் (25), யோகேஷ் (20) என்​பது தெரிய வந்​தது. தலைமறைவாக இருந்த 5 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

சரித்​திர பதிவேடு குற்​றவாளி​கள்

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்ட ஜெயகுமார், ரமேஷ்குமார் ஆகிய இரு​வரும் எண்​ணூர் காவல் நிலை​யத்​தில் சரித்​திரப் பதிவேடு குற்​றவாளி​கள் என்​பது தெரிய​வந்​தது.

கண்காணிப்பு கேமராக்களை அணைத்து விட்டு திருவொற்றியூர் துணிக்கடையில் கத்திமுனையில் கொள்ளை: 5 பேர் கைது
‘கருப்பர் நகரம்’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in