புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
குற்றவாளி கருணாஸ்

குற்றவாளி கருணாஸ்

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்குத் தண்டனையை போக்சோ நீதிமன்றம் நீதிபதி சுமதி இன்று அறிவித்துள்ளார்.

முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். 2 நாட்களுக்குப் பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது.

இச்சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 540 பக்க குற்றப் பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.

இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

விசாரணை முடிந்த நிலையில் கடந்த 30-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் இந்திய தண்டனை சட்டம் 366-வது பிரிவில் பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், 342-வது பிரிவில் குழந்தையை அடைத்து வைத்தல், 302-வது பிரிவான கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் மரணத்தண்டனைக்கான குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கிறது. அரிதினும் அரிதான வழக்கு என உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு தரப்பு, எதிர்தரப்பு விவாதங்களுக்கு பிறகு தண்டனை விவரம் மே 5ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி சுமதி குறிப்பிட்டிருந்தார். வரும் மே 5-ம் தேதி இரு தரப்பு வாதத்துக்கு பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக தெரிவித்தார்.

அதையடுத்து இருதரப்பு வாதத்துக்கு பிறகு குற்றவாளியின் குடும்பச் சூழல் தொடர்பான அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனையை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி அறிவித்தார். நீதிபதியின் தண்டனை அறிப்பை தொடர்ந்து குற்றவாளி கருணாஸ் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

<div class="paragraphs"><p><em>குற்றவாளி கருணாஸ்</em></p></div>
இந்தியா - யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in