புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி கைது

ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி

ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி

Updated on
1 min read

புதுச்சேரி: போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஜிஎஸ்டி ஒருவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார். மேலும், ஜிஎஸ்டி அதிகாரி ஒருவரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

புதுவையில் போலி மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு மருந்துகள் பிரபல நிறுவனத்தின் பெயரில் 16 மாநிலங்களில் விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட கிடங்குகளில் சோதனை நடத்தி, பல கோடி மதிப்பிலான மருந்து, மாத்திரைகள்பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா என்ற வள்ளியப்பன், அவரது பங்குதாரர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி. நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ராஜா, வனத் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தியிடம் பல கோடி கொடுத்ததாகவும், சத்தியமூர்த்தி தனது தொடர்புகள் மூலம் உதவியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தலைமறைவான சத்தியமூர்த்தியை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை கைது செய்து இன்று புதுச்சேரி கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தனக்கு நெருக்கமாக இருந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் குறித்து சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஜிஎஸ்டி அலுவலக கண்காணிப்பாளர் பரிதா என்பவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி</p></div>
ஓட்டுநர்களுக்கு லாபம் பகிரும் ‘பாரத் டாக்ஸி’ சேவை விரைவில் அறிமுகம்: அமித் ஷா விவரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in