

மாமல்லபுரம்: ஓஎம்ஆர் சாலையில் மாடு குறுக்கே வந்ததால், தனியார் தொழிற்சாலை வேன் மற்றும் அரசுப் பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்; 9 பேர் காயமடைந்தனர்.
கல்பாக்கம் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 13 பெண்களை ஏற்றிக் கொண்டு, தனியார் தொழிற்சாலையின் வேன் ஒன்று ஓஎம்ஆர் சாலையில் கேளம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பையனூரில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர் திசையில் மாமல்லபுரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு வேனில் பயணம் செய்த கூவத்தூர் அடையாளச்சேரியை சேர்ந்த ஜெயலட்சுமி (40), கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரியை துர்காலட்சுமி (34) ஆகியோர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், காயமடைந்த ஐஸ்வர்யா(25) என்ற பெண்ணை அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
லேசான காயமடைந்த 9 பெண்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இந்த விபத்து குறித்து, மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஓஎம்ஆர் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகின்றன.இதனால் வாகன விபத்துக்குள் ஏற்படுகின்றன. எனவே சாலைகளில் சுற்றித்திரியும்கால்நடைகளின் உரிமையாளர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.