சென்னை: சீருடையுடன் மதுபோதையில் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது

பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு
சூர்யா

சூர்யா

Updated on
1 min read

சென்னை: பெண்​ணின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்​து, பாலியல் அத்​து​மீறலில் ஈடுபட முயன்ற காவலர் கைது செய்​யப்​பட்​டார். அவரை பணி​யிடை நீக்​கம் செய்து காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டுள்​ளார்.

சேலம் மாவட்​டம், மேட்​டூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சூர்யா (28). சென்னை ஐஸ்​ஹவுஸ் காவல் நிலை​யத்​தில் காவல​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். கருத்து வேறு​பாடு காரண​மாக மனைவியை பிரிந்து வசித்து வரு​கிறார்.

இவர் நேற்று முன்​தினம் மாலை போலீஸ் சீருடை​யில் ராயப்​பேட்டை பகு​தி​யில் உள்ள வீடு ஒன்​றுக்​குள் அத்​து​மீறி நுழைந்​துள்​ளார். பின்​னர் அங்கு தனி​யாக இருந்த 32 வயதுடைய பெண்​ணிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடுபட முயன்​ற​தாக கூறப்​படு​கிறது.

காவலரை அந்த பெண் வீட்​டுக்​குள்ளே வைத்து வெளிப்​புற​மாக பூட்​டி​விட்டு கூச்​சலிட்​டார். அதைக் கேட்டு அக்​கம்​பக்​கத்​தினர் திரண்​டனர். மேலும் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்​கும் தகவல் தெரி​வித்​தனர்.

போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து கதவைத் திறந்து காவலர் சூர்​யாவை கைது செய்​தனர். அப்​போது அவர் மது​போதை​யில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக ஐஸ்​ஹவுஸ் போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்த விவ​காரம் சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதையடுத்​து, உரிய விசா​ரணை நடத்த காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டார். அதன்​படி விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இதில் காவலர் சூர்யா அத்​து​மீறியது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து அவரை காவல் ஆணை​யர் அருண் பணி​யிடை நீக்​கம் செய்து நேற்று உத்​தர​விட்​டார்.

“சம்​பந்​தப்​பட்ட பெண் கள்​ளச் சந்​தை​யில் மது விற்​பனை செய்​யும் தொழில் செய்து வரு​கிறார். இது தொடர்​பான சோதனைக்​காகவே அப்​பெண் வீட்​டுக்​குச் சென்​றேன். வேறு எந்த நோக்​கத்​துட​னும் அங்கு செல்​ல​வில்​லை” என காவலர் சூர்யா போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார்.

ஆனால், “அவர் அந்த பெண்​ணிடம் ‘நீ கணவரை பிரிந்​தும், நான் மனை​வியைப் பிரிந்​தும் வாழ்​கிறோம். நாம் இரு​வரும் திரு​மணம் செய்​து​ கொள்​வோம்’ எனக் கூறிய படி பாலியல் அத்​து​மீறலில் ஈடுபட முயன்​றுள்​ளார். இதனாலேயே அவர் மீது காவல் ஆணை​யர் நடவடிக்கை எடுத்​துள்​ளார்” என போலீஸ்​ அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>சூர்யா</p></div>
உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல்: ரயில்வே போலீஸார் நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in