தாம்பரம்: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸார்

முகம்மது சதாம் உசேன்

முகம்மது சதாம் உசேன்

Updated on: 
1 min read

சென்னை: ​தாம்பரம் அருகே முக்​கிய ரவுடி போலீ​ஸா​ரால் சுட்​டுப் பிடிக்​கப்​பட்​டுள்​ளார். சென்னை தாம்​பரத்தை அடுத்த மாடம்​பாக்​கம் வள்​ளலார் நகரைச் சேர்ந்​தவர் முகம்​மது சதாம் உசேன் (29). ‘ஏ’ பிளஸ் ரவுடி பட்​டியலில் உள்ள இவர் மீது கொலை, அடிதடி, திருட்டு உட்பட 20-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன.

கஞ்சா விற்​பனை​யிலும் ஈடு​பட்டு வந்​துள்​ளார். மேலும் வழக்கு விசா​ரணைக்கு நீதி​மன்​றங்​களில் சரிவர ஆஜரா​காமல் தலைமறை​வாக இருந்து வந்​துள்​ளார். 2 வழக்​கு​களில் இவருக்கு நீதி​மன்​றம் பிடி​யாணை பிறப்​பித்​துள்​ளது.

காட்டில் பதுங்கல்

இதையடுத்து இவரை கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்த தாம்​பரம் காவல் ஆணை​யர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்​தர​விட்​டிருந்​தார். எனவே சதாம் உசேனைப் பிடிக்க போலீஸ் தனிப்​படை அமைக்​கப்​பட்டு தீவிர தேடுதல் வேட்டைநடத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில் அவர் மணிமங்​கலம் காவல் நிலை​யத்​துக்கு உட்​பட்ட கரசங்​கால் காட்​டுப்​பகு​தி​யில் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு நேற்று அதி​காலை தகவல் கிடைத்​தது. இதையடுத்து மணிமங்​கலம் காவல் ஆய்​வாளர் நெடு​மாறன் தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் காலை 5.15 மணி​யள​வில் அங்கு சென்று சதாம் உசேனை சுற்றி வளைத்​தனர். அப்​போது அவர் பட்​டாக் கத்​தி​யால் போலீ​ஸாரை வெட்​டி​னார்.

போலீ​ஸார் அந்த தாக்​குதலில் இருந்து விலகி அவரை சரணடை​யும்​படி எச்​சரித்​தனர். ஆனால் அவர் தப்​பியோட முயற்சி செய்​தார். இதையடுத்து தற்​காப்பு நடவடிக்​கை​யாக போலீ​ஸார் சதாம் உசேனின் காலில் துப்​பாக்​கி​யால் சுட்​டனர்.

இதில் இடது முழங்​காலுக்​குக் கீழே துப்​பாக்​கிக் குண்டு பாய்ந்து அவர் சுருண்டு விழுந்​தார். உடனடி​யாக அவரை போலீ​ஸார் சென்னை அரசு பொது மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்​தனர்.

20 கிலோ கஞ்சா பறிமுதல்

மேலும் அவரிட​மிருந்து 4 நாட்டு வெடிகுண்​டு​கள், 3 பட்​டாக் கத்​தி​கள், 20 கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது தொடர்​பாக மணிமங்​கலம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தகவலறிந்த போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்​ஹா, சம்பவ இடம் விரைந்து பார்​வை​யிட்​டு, விசா​ரணை நடத்​தி​னார். முகமது சதாம் உசேன் 2022-ம் ஆண்டு மாடம்​பாக்​கம் ஊராட்சி மன்​றத் தலை​வ​ராக இருந்த வெங்​கடேசன் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​யாக சேர்க்​கப்​பட்​டிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. அவரை போலீ​ஸார் சுட்​டுப் பிடித்​திருப்​பது ரவுடிகளிடையே அச்​சத்​தை ஏற்​படுத்​தியுள்​ளது.

<div class="paragraphs"><p>முகம்மது சதாம் உசேன்</p></div>
செப்டிக் டேங்க் கட்டுமான பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in