சேலத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 700 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

போலீஸார் விசாரணை
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்ற வெள்ளி பட்டறை

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்ற வெள்ளி பட்டறை

படம் எஸ்.குரு பிரசாத் 

Updated on: 
1 min read

சேலம்: சேலம் அருகே காவலாளியை தாக்கி நகைப் பட்டறையில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 700 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளப்பட்டி போலீஸார் விசாரணை.

சேலம் மாவட்டம் சின்னேறி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளி பட்டறை நடத்தி வருகிறார். இவர் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்களை தயார் செய்து கடைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வந்தார்.

இதனிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிப் பொருட்கள் தயார் செய்யும் பணி பாலசுப்பிரமணியம் பட்டறையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் வெள்ளிப்பட்டறை காவலாளியை தாக்கி, கைகளை கட்டிவிட்டு பட்டறைக்குள் புகுந்து, 700 கிலோ வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பட்டறை உரிமையாளர் பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பள்ளப்பட்டி போலீஸார் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு, மர்ம கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் பாபு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

<div class="paragraphs"><p>சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்ற வெள்ளி பட்டறை</p></div>
“விசிக அங்கம் வகிக்கும் தவெக அணிக்கு பாமகவினர் எப்படி வாக்களிப்பர்?” - திருமாவளவன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in