கடற்கரையில் வகுப்பு தோழருடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த காவலர் கைது

கடற்கரையில் வகுப்பு தோழருடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த காவலர் கைது
Updated on
1 min read

சென்னை: அடை​யாறு பகு​தி​யைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒரு​வர் கேளம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் ஏ.ஐ (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்நுட்​பம் தொடர்​பாக 3-ம் ஆண்டு படித்து வரு​கிறார். இவர், தனது வகுப்பு தோழருடன் நேற்று முன்​தினம் இரவு காரில் பெசன்ட் நகர் கடற்​கரையை ஒட்​டி​யுள்ள பகு​திக்கு சென்​றார்.

அங்கு காரை நிறுத்​தி​விட்டு இரு​வரும் பின் இருக்​கை​யில் அமர்ந்து சாப்​பிட்​டுக் கொண்​டிருந்​தனர். அப்​போது 30 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் ஒரு​வர் காருக்​குள் டார்ச் லைட் அடித்​துள்​ளார்.

பிறகு கார் கதவை திறந்து ஓட்​டுநர் இருக்​கை​யில் அமர்ந்து கொண்​டு, தான் சாஸ்​திரி நகர் காவல் நிலைய காவலர் எனக்​கூறி அடை​யாள அட்​டையை காண்​பித்​துள்​ளார். இங்கே தனிமை​யில் என்ன செய்து கொண்​டிருக்​கிறீர்​கள் என கல்​லூரி மாண​வி​யிட​மும், அவரது வகுப்பு தோழரிட​மும் அநாகரீக​மாக பேசி உள்​ளார்.

பின்​னர், நான் கேட்​கும் பணத்தை தரவில்லை என்​றால் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று இரு​வர் மீதும் வழக்​குப்​ப​திவு செய்து விடு​வேன் என மிரட்​டல் விடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, இரு​வரும் தங்​கள் கையில் பணம் இல்​லை. ஏடிஎம்​மில் எடுத்து தரு​கிறோம் எனக் கூறி​யுள்​ளனர். இதையடுத்து அந்த காவலரே காரை ஓட்​டிச் சென்று சிறிது தூரத்​தில் உள்ள வங்கி ஏடிஎம் வாசலில் நிறுத்தியுள்​ளார். கல்​லூரி மாணவர் மட்​டும் இறங்கி சென்று ஏடிஎம்​-ல் ரூ.8,000 எடுத்து வந்து காவலரிடம் கொடுத்​துள்​ளார்.

கல்​லூரி மாணவர் ஏடிஎம்​மில் பணம் எடுக்க சென்ற நேரத்​தில் காரில் அமர்ந்​திருந்த மாண​வி​யிடம் காவலர் அத்துமீறலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. பணத்தை வாங்​கியதும் மேலும், சிறு தூரம் காரை ஓட்​டிச் சென்ற காவலர் காரை நிறுத்​தி​விட்​டு, தனது இருசக்கர வாக​னத்​தில் சென்​று​விட்​டார்.

பிறகு கல்​லூரி மாண​வி​யும் அவரது வகுப்பு தோழரும் அவர்​களது வீடு​களுக்கு சென்று விட்​டனர். நடந்த சம்​பவம் தொடர்​பாக கல்​லூரி மாணவி நேற்று முன்​தினம் தனது சகோ​தரி​யிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து கல்​லூரி மாண​வி​யும் அவரது சகோ​தரி​யும் சாஸ்​திரி நகர் காவல் நிலை​யம் வந்து புகார் அளித்​தனர். அதன் பேரில் போலீ​ஸார் சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்து ஜோசப் என்ற காவலரை கைது செய்​தனர்.

கொண்​டித்​தோப்பு காவலர் குடி​யிருப்​பில் வசிக்​கும் அவர் அயல் பணி​யாக உயர் ​நீ​தி​மன்ற வளாகத்​தில் பணி​யாற்​று​வ​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இவர் இதே போல் வேறு யாரிட​மாவது கைவரிசை காட்டி உள்​ளா​ரா? என அவரிடம்​ போலீ​ஸார்​ தொடர்ந்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

கடற்கரையில் வகுப்பு தோழருடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த காவலர் கைது
சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதற்காக அமலாக்கத்துறையும் வழக்கு பதிய கட்டாயமில்லை: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in