திமுக மண்டலக் குழுத் தலைவர் மீது தாக்குதல்: அதிமுகவினர் மீது போலீஸில் புகார்

திமுக மண்டலக் குழுத் தலைவர் மீது தாக்குதல்: அதிமுகவினர் மீது போலீஸில் புகார்
Updated on
1 min read

சென்னை: ​திமுக மண்​டலக் குழுத் தலை​வரை கத்​தி​யால் வெட்டி​விட்டு தப்பி ஓடிய அதி​முக​வினரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். சென்னை தண்​டை​யார்​பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்​தவர் கணேசன் (52).

இவர் திமுக​வின் 38-வது வட்​டச் செய​லா​ள​ராக​வும், சென்னை மாநக​ராட்​சி​யின் 4-வது மண்​டலக் குழுத் தலை​வ​ராக​வும் பதவி வகித்து வரு​கிறார். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் நிறைவடைந்த நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு கணேசன் நேதாஜி நகர் 3-வது தெரு​வில் உள்ள தனது கட்சி அலு​வல​கத்​தில் ஆதர​வாளர்​களு​டன் தேர்​தல் பணி​கள் குறித்து ஆலோ​சித்​துக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, அங்கு வந்த அதி​முகவைச் சேர்ந்த விநாயகம், செல்​வம், டெல்​லி​ராஜ் மற்​றும் அவர்​களது ஆதர​வாளர்​கள் திடீரென திமுக அலு​வல​கத்​துக்​குள் அத்​து​மீறி நுழைந்​தனர்.

அவர்​கள் கணேசனைத் தகாத வார்த்​தைகளால் திட்​டியதுடன், மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் அவரை வெட்டி தாக்​குதலில் ஈடு​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. கணேசன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் அதிர்ச்​சி​யில் கூச்​சலிட​வே, அக்​கம் பக்​கத்​தினர் அங்கு திரண்​டனர்.

இதனால் அச்​சமடைந்த அதி​முக​வினர் உடனடி​யாக அந்த இடத்​திலிருந்து தப்​பிச் சென்​றனர். தாக்​குதலில் காயமடைந்த கணேசன், சிகிச்​சைக்​காக அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

சிகிச்​சைக்​குப் பின் சம்​பவம் குறித்து கணேசன் ஆர்​.கே.நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார். புகாரைப் பெற்​றுக்​கொண்ட போலீ​ஸார், வழக்​குப்​ப​திவு செய்து தலைமறை​வாக உள்ள விநாயகம், செல்​வம் உள்​ளிட்​டோரைத் தேடி வரு​கின்​றனர்.

திமுக மண்டலக் குழுத் தலைவர் மீது தாக்குதல்: அதிமுகவினர் மீது போலீஸில் புகார்
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்: வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்த மனு தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in