சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்: வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்த மனு தள்ளுபடி

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்: வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்த மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: சு​வாதி கொலை வழக்​கில் கைதான ராம்​கு​மார் சிறை​யில் மரணம் அடைந்​தது தொடர்​பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் பிறப்​பித்த உத்​தரவை எதி்ர்த்து ராம்​கு​மாரி்ன் தந்தை தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நுங்​கம்​பாக்​கம் ரயில் நிலை​யத்​தில் பொறி​யாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான ராம்​கு​மார் அதே ஆண்டு சிறை​யில் மின்​சார வயரை கடித்து தற்​கொலை செய்து கொண்​ட​தாக கூறப்​பட்​டது.

இதுதொடர்​பான வழக்கை தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் காவல் ஆணை​யர் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் கடந்த 2020-ல் முடித்து வைத்தது. இந்த உத்​தரவை எதிர்த்து ராம்​கு​மாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், சென்னை காவல் ஆணை​யரின் அறிக்​கை​ அடிப்​படை​யில் ராம்​கு​மார் மரணத்தை தற்​கொலை என முடிவு செய்து தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அது தொடர்​பாக மீண்​டும் விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஏ.பாலாஜி மற்​றும் தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் தரப்​பில் வழக்​கறிஞர் வி.டி.​பாலாஜி, காவல்​துறை தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி. முகிலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​திகள், இந்த வழக்​கில் காவல்​துறை, மனித உரிமை ஆணைய புலன் விசா​ரணைக்​குழு ஆகிய​வற்​றின் விசா​ரணை அறிக்​கை​களின் அடிப்​படை​யில் தான் தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்​தர​விட்​டுள்​ளது. ஆணை​யத்​தின் அந்த உத்​தர​வில் தலை​யிட எந்த காரண​மும் இல்லை எனக்​கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்​தர​வி்ட்​டுள்​ளனர்​.

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்: வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்த மனு தள்ளுபடி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in