திருத்தணி | சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ வழக்கு

திருத்தணி | சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ வழக்கு
Updated on: 
1 min read

திருத்தணி: சிறுமியை திரு​மணம் செய்து கர்ப்​பமாக்​கிய இளைஞர், உறவினர்​கள் உட்​பட 4 பேர் மீது போலீ​ஸார் போக்சோ வழக்கு பதிவுசெய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்​னையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருத்தணி ஸ்டா​லின் நகரைச் சேர்ந்த சதீஷ் (31) என்​பவருடன் திரு​மணம் நடை​பெற்​றுள்​ளது.

இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு சிறுமியை அவரது கணவர் திருத்​தணி அரசு மருத்​து​வ​மனைக்கு பரிசோதனைக்​காக அழைத்​துச் சென்​றபோது 3 மாத கர்ப்​பமாக இருப்பது தெரிய​வந்​தது.

குழந்தை திரு​மணம் நடை​பெற்றது குறித்து அரசு மருத்​து​வ​மனை தகவலின் பேரில் திருத்​தணி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து சிறுமி​யின் கணவ​ரான சதீஷ் மீது வழக்​குப் பதிவு செய்​தனர்.

சிறுமிக்கு திரு​மணம் செய்து வைத்த சதீஷின் தந்தை சிவா, தாய் சரளா, சிறுமி​யின் தாய் பவானி ஆகியோர் மீதும் போலீ​ஸார் போக்சோ சட்​டப்​பி​ரி​வின் கீழ் வழக்​குப் பதிந்துள்ளனர்.

திருத்தணி | சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ வழக்கு
திருவிடைமருதூர் அருகே பூட்டிய வீட்டில் திருடியதாக வங்கதேச மாமியாருடன் சென்னை இளைஞர் கைது

X