சென்னை: திருமணம் செய்துகொள்ளும் பிரச்சினையில் காதலன் வீட்டில் பிசியோதெரபி மாணவி தற்கொலை

சென்னை: திருமணம் செய்துகொள்ளும் பிரச்சினையில் காதலன் வீட்டில் பிசியோதெரபி மாணவி தற்கொலை
Updated on
1 min read

சென்னை: காதலன் வீட்​டில் பிசி​யோதெரபி மாணவி தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை சூளைமேடு, வன்​னியர் தெரு​வைச் சேர்ந்​தவர் ஹரிஷ் குமார் (26). மருந்து விற்​பனை பிர​தி​நி​தி​யாக பணி​யாற்றி வரு​கிறார். இவரும் நுங்​கம்​பாக்​கம் புஷ்பா நகரைச் சேர்ந்த பூஜா (24) என்ற பெண்​ணும் கடந்த 9 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. பூஜா தனி​யார் கல்​லூரி ஒன்​றில் பிசி​யோதெரபி படித்து வந்​தார். அடிக்கடி காதலன் வீட்​டுக்கு சென்று வரு​வதை அவர் வழக்​க​மாக வைத்​திருந்​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தின​மும் ஹரிஷ் குமார் வீட்​டுக்கு பூஜா சென்​றுள்​ளார். அப்​போது திரு​மணம் செய்​து​கொள்​வது தொடர்​பாக இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் வேதனை அடைந்த பூஜா, ஹரிஷ் குமார் வீட்​டின் அறை ஒன்​றுக்கு சென்​றுள்​ளார். பின்​னர் நீண்ட நேர​மாகி​யும் வெளியே வராத​தால் சந்​தேகம் அடைந்த, ஹரிஷ் குமார் ஜன்​னல் வழி​யாக பார்த்​த​போது, பூஜா தூக்​கில் தொங்​கியது தெரிய​வந்​தது.

உடனடி​யாக அவர் கதவை உடைத்து உள்ளே சென்​று, மாண​வியை மீட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றார். பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் பூஜா ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். தகவல் அறிந்து சூளைமேடு போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து விசா​ரித்​தனர். மேலும், திருமண விவ​காரம் தொடர்​பாக ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்டால் பூஜா தற்​கொலை செய்து கொண்​டாரா அல்​லது ஹரிஷ் குமார் தாக்கி உயி​ரிழந்​தாரா என போலீ​ஸார் வி​சா​ரிக்கின்றனர்.

சென்னை: திருமணம் செய்துகொள்ளும் பிரச்சினையில் காதலன் வீட்டில் பிசியோதெரபி மாணவி தற்கொலை
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் நெரிசல் - பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய லட்சக்கணக்கான மக்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in