சென்னை | இளம் பெண்ணிடம் போட்டோ ஷூட் எடுப்பதாக நகை திருடிய பிசியோ தெரபிஸ்ட் கைது

சென்னை | இளம் பெண்ணிடம் போட்டோ ஷூட் எடுப்பதாக நகை திருடிய பிசியோ தெரபிஸ்ட் கைது
Updated on
1 min read

சென்னை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம், கரு​டாழ்​வார் நகரில் குடும்​பத்​துடன் வசிப்​பவர் லேப் டெக்​னீஷியன் புனி​தாஸ்ரீ (22). சினி​மா​வில் நடிக்​கும் ஆசை​யில் இருந்தார். இவரது வீட்​டின் கீழ் தளத்​தில் கோயம்​புத்​தூரைச் சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட் ஜெகதீஸ் (52) மனைவி, மகளு​டன் வாடகைக்கு வசித்து வரு​கிறார்.

போட்டோ ஷூட் எடுத்து அந்த போட்டோ மற்​றும் வீடியோக்​களை காண்​பித்து சினிமா அல்​லது டிவி தொடர்​களில் நடிக்க வாய்ப்பு கேட்​கலாம் என புனி​தாஸ்ரீ​யிடம் ஜெகதீஸ் தெரி​வித்​துள்​ளார்.

இதை நம்​பிய புனி​தாஸ்ரீ போட்டோ ஷூட்​ நடத்த ஒப்​புக் ​கொண்​டார். இதை யடுத்​து, ஜெகதீஸ் அவரை சென்​னைக்கு காரில் அழைத்​துச் சென்​றார். பின்​னர் போட்டோ ஷூட்​டுக்கு தேவை​யான புதிய ஆடைகளை வாங்க ராயப்​பேட்​டை​யில் உள்ள பிரபல வணிக வளாகத்​துக்கு கூட்​டிச் சென்​றார்.

அங்கு புனி​தாஸ்ரீயை ஆடைகளை வாங்க வைத்​து, அந்த ஆடைகளை அவர் அணிந்து பார்த்​துக் கொண்​டிருந்த நேரத்​தில், அவர் ஏற்​கெனவே கைப்​பை​யில் வைத்​திருந்த 16 பவுன் தங்க நகைகளை நைசாக திருடிக் கொண்டு ஜெகதீஸ் தப்​பி​னார்.

சிறிது நேரத்​துக்​குப் பிறகு இதை கவனித்த புனி​தாஸ்ரீ இது தொடர்​பாக அண்ணா சாலை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து தலைமறை​வான ஜெகதீஸ் மற்​றும் திருட்​டுக்கு உதவிய​தாக இருந்த 10-ம் வகுப்பு படித்​து​வரும் 16 வயது சிறுமி ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் ஜெகதீஸ் மற்​றும் இளஞ்​சிறுமி ஆகியோர் இதே​போல சென்னை சாஸ்​திரி நகர், வேளச்​சேரி உள்​ளிட்ட பல இடங்​களில் குடும்​பத்​துடன் நன்​றாக பழகி நம்​பிக்கை ஏற்​படுத்​தி, தங்க நகைகள் மற்​றும் செல்​போன்​களை ஏமாற்றி திருடி​யுள்​ளது​ தெரிய​வந்​தது.

சென்னை | இளம் பெண்ணிடம் போட்டோ ஷூட் எடுப்பதாக நகை திருடிய பிசியோ தெரபிஸ்ட் கைது
கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினருக்கு ரூ.7,379 கோடி பணப் பலன்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in