சென்னை | சொத்து அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னை | சொத்து அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை அடை​யாறு அருணாச்​சலபுரம் மெயின் ரோட்​டைச் சேர்ந்த ஆனந்த் ஜெய்​ராம் மூர்த்தி என்​பவருக்கு சொந்​த​மான நிலத்​தை, துரைப்​பாக்​கத்​தைச் சேர்ந்த அகிலா, அவரது கணவர் சண்​முகசுந்​தரம் (55) ஆகியோர் போலி ஆவணங்​கள் தயாரித்​து, அபகரிக்க முயன்​ற​தாக 2008-ம் ஆண்டு காவல் ஆணை​யரகத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

அதன்​பேரில், மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சார் வழக்​குப்​ப​திவு செய்து நடத்திய விசா​ரணை டி​வில் இரு​வர் மீதும் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டு, எழும்​பூரில் உள்ள சிறப்பு பெருநகர குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இந்த வழக்​கில் அகிலா தொடர்ந்து நீதி​மன்​றத்​தில் ஆஜராகி வந்த நிலை​யில், சண்​முக சுந்​தரம் 2009-ம் ஆண்டு முதல் விசா​ரணைக்கு ஆஜரா​காமல் தலைமறை​வாக இருந்​தார்.

இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்​படுத்த நீதி​மன்​றம் பிடி​யாணை பிறப்​பித்​தது. சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வுப்​படி, அவரை தேடி வந்த நிலை​யில், கடந்த 17 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த சண்​முகசுந்​தரத்தை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர், அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி சிறையில் அடைத்தனர்.

சென்னை | சொத்து அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
உயர் கல்விக் கடன் பெற மாவட்டம்தோறும் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in