முதல்வருக்கு இன்ஸ்டாவில் மிரட்டல்: பெரம்பலூர் இளைஞருக்கு முன்ஜாமீன் மறுப்பு

முதல்வருக்கு இன்ஸ்டாவில் மிரட்டல்: பெரம்பலூர் இளைஞருக்கு முன்ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

மதுரை: தமிழக முதல்வர் விஜய்க்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பெரம்பலூர் இளைஞருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட து.

பெரம்பலூரை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் தினேஷ்குமார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி களஞ்சியம் என்ற பெயரில் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தினேஷ் குமார் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டதாகவும் ஒத்தக்கடை காவலர் ஆறுமுகம் என்பவர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து தினேஷ்குமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தினேஷ்குமார் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இந்த மனு நீதிபதி சாய் சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பி.பாண்டி வதிடுகையில், “தினேஷ்குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க கூடாது” என கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, தினேஷ்குமாரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முதல்வருக்கு இன்ஸ்டாவில் மிரட்டல்: பெரம்பலூர் இளைஞருக்கு முன்ஜாமீன் மறுப்பு
செங்கல்பட்டு: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பாசிரியர்களை கட்டாயப்படுத்துவதாக எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in