கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக சிறை கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்கி மற்றொரு நோயாளி உயிரிழப்பு

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக சிறை கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்கி மற்றொரு நோயாளி உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்​பகத்​தில் சிறைக் கைதி​கள் வார்​டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்​கிய​தில் படு​காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்​றொரு நோயாளி உயி​ரிழந்​தார்.

சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள அரசு மனநல காப்​பகத்​தில் 750-க்​கும் மேற்​பட்ட நோயாளி​கள் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

சிறை​களில் விசா​ரணைக் கைதி​கள், தண்​டனைக் கைதி​களாக இருப்​பவர்​களில் யாருக்​காவது மனநல பாதிப்பு ஏற்​பட்​டால், அவர்​கள் இங்கு அனுப்பிவைக்​கப்​படு​கின்​றனர்.

அவர்​களுக்கு சிகிச்​சையளிக்க, சிறைக் கைதி​கள் சிகிச்​சைப் பிரிவு உள்​ளது. அங்கு மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், மருத்​துவ பராமரிப்​பாளர்​கள், வார்டு ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

கொலை வழக்கில் கைது செய்​யப்​பட்ட 20 வயதுடைய விசா​ரணைக் கைதி ஒரு​வர், தீவிர மனச்​சிதைவு, தற்​கொலை தூண்​டு​தல் ஆகிய நோய்க்​குள்​ளான​தால், அவர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, சில மாதங்​களாக அந்த வார்​டில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

கடந்த 20-ம் தேதி காலை​யில் அவர் மற்​றொரு நோயாளி​யான ஜாஹிர் என்​பவரை தாக்​கி​யுள்​ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அரு​கில் இருந்​தவர்​கள் மீட்​டு, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்த்தனர்.

மருத்து​வர்​கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலை​யில், நேற்று ஜாஹிர் உயி​ரிழந்​தார். இதைக் கொலை வழக்​காகப் பதிவு செய்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். ஜாஹிரைத் தாக்​கிய​வர், ஏற்​கெனவே தனது தாயைக் கொன்​ற தற்​காக கைது செய்​யப்​பட்​ட​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

உயி​ரிழந்த ஜாஹிர் வாய் பேச முடி​யாதவர். மனநலம் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர், பொள்​ளாச்​சியை அடுத்த ஆழி​யாறு பகு​தி​யில் யாசகம் எடுத்து வந்​துள்​ளார். கடந்த 2024-ல் மற்​றொரு பிச்​சைக்​காரரை தலை​யில் கல்​லால் தாக்கி கொலை செய்​த​தால் கைது செய்​யப்​பட்​டார். மனநலம் பாதிக்​கப்​பட்ட அவர், காப்​பகத்​தில் சிகிச்சை பெற்று வந்த நிலை​யில், மற்​றொரு நோயாளி தாக்​கி உயி​ரிழந்​துள்​ளார்.

முழு​மை​யான பாது​காப்பு

இதுதொடர்​பாக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் கூறும்​போது, “நீ​தி​மன்ற உத்​தர​வின் பேரில் மனநல காப்​பகத்​தில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த 2 விசா​ரணை கைதி​களுக்கு இடையே மோதல் ஏற்​பட்டு இந்த உயி​ரிழப்பு நிகழ்ந்​துள்​ளது.

கீழ்ப்பாக்கம் மனநல காப்​பகத்​தில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளி​களின் பாது​காப்பும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்கு முழு​மை​யான பாது​காப்​பு அளிப்​பது எங்​களின்​ கடமை” என்​று தெரிவித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக சிறை கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்கி மற்றொரு நோயாளி உயிரிழப்பு
போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in