சென்னையில் வலி நிவாரண மாத்திரை விற்ற 2 பேர் கைது - 910 மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில் வலி நிவாரண மாத்திரை விற்ற 2 பேர் கைது - 910 மாத்திரைகள் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் சட்டவிரோத மாக போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் வி.ஆர்.பிள்ளை தெரு சந்திப்பில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் வந்த ஆட்டோவை மறித்த போலீஸார், அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில், வலி நிவாரண மாத்திரைகள் அதிக அளவில் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35), பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த சையது ரபிக் உதீன்(25) என்பதும், மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 910 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் வலி நிவாரண மாத்திரை விற்ற 2 பேர் கைது - 910 மாத்திரைகள் பறிமுதல்
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றை பென்குயின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in