விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்: துபாயில் இருந்து கடத்தி வந்த இளைஞர் கைது

விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்: துபாயில் இருந்து கடத்தி வந்த இளைஞர் கைது
Updated on
1 min read

துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் ஒன்று நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சுற்றுலா விசாவில், துபாய் சென்று விட்டு வந்த அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர் தனது உள்ளாடைக்குள் ரூ.1 கோடி மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அவர் தங்கக் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்: துபாயில் இருந்து கடத்தி வந்த இளைஞர் கைது
அக்சர் அதிரடி சதத்தால் குஜராத் வெற்றி: விஜய் ஹசாரே கோப்பை தொடர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in