சென்னை: நகை, ஜவுளிக்கடையில் நூதன மோசடியில் ஈடுபட்ட முதியவர் கைது

சென்னை: நகை, ஜவுளிக்கடையில் நூதன மோசடியில் ஈடுபட்ட முதியவர் கைது
Updated on: 
1 min read

சென்னை: தி.நகர், வடக்கு உஸ்​மான் சாலை​யில் உள்ள நகைக்கடை ஒன்​றில் கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி மனோகர் (60) என்​பவர் ஒரு ஜோடி வெள்​ளிக் கொலுசை தேர்வு செய்​துள்​ளார்.

அதற்​கான தொகையை காசோலை மூலம் செலுத்​து​வ​தாகக் கூறி, வங்​கிக் கணக்கு விவரத்தை பெற்​றுச் சென்றார்.

மறுநாள் மீண்​டும் கடைக்கு வந்த மனோகர், பணத்தை காசோலை மூலம் செலுத்​தி​விட்​ட​தாகக் கூறி, வங்கி அனுப்​பிய குறுஞ்​செய்​தியை காண்​பித்​துள்​ளார்.

இதை நம்​பிய கடை ஊழியர்​கள், ரூ.29,250 மதிப்​புள்ள வெள்​ளிக் கொலுசை அவரிடம் வழங்​கி​யுள்​ளனர்.

ஆனால் அன்று மாலை கடை​யின் வங்​கிக் கணக்கை சரிபார்த்​த​போது, மனோகரின் வங்​கிக் கணக்​கில் பணம் இல்​லாததால் அவரது காசோலை திரும்​பியது தெரிய​வந்​தது.

இதேபோன்று, கடந்த அக்​.26-ம் தேதி, தி.நகரில் உள்ள துணிக்​கடையில் ரூ.81,950 மதிப்​புள்ள பட்​டுப் புட​வையை வாங்​கி​உள்​ளார்.

புகார்​களின் அடிப்​படை​யில் பாண்டி பஜார் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து தி.நகர், ராமகிருஷ்​ணன் தெரு​வைச் சேர்ந்​தமனோகரை கைது செய்தனர். ரூ.1.11 லட்​சம் மதிப்​புள்ள வெள்​ளிக் கொலுசு மற்​றும் பட்​டுப் புட​வையை அவரிட​மிருந்து மீட்​டனர்.

சென்னை: நகை, ஜவுளிக்கடையில் நூதன மோசடியில் ஈடுபட்ட முதியவர் கைது
நிலம் விற்பனை தொடர்பான வழக்கு விவகாரத்தில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்

X