

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் போதை மாத்திரைகளை விற்பனைக் காகவைத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா, 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பள்ளிக்கரணை போலீஸார் நேற்று முன்தினம் ரேடியல் சாலை குப்பைக் கிடங்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின் றிருந்த இளைஞரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா. போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபு மேடே (31) என்பதும், போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அவற்றைக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் பாபு மேடே சிறையில் அடைக்கப்பட்டார்.