

சென்னை: சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்க சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் செல்போன் எண், வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், அவர்களது பெற்றோர்கள் அடுத்தடுத்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறுமி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் கல்விக்கு உதவுவதாகக் கூறி ஒருமுறை அழைத்து செல்லும்போது காருக்குள்ளேயே வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியிடம் சிறப்புக் குழுவினர் விசாரிக்க உள்ளனர்.