ராமேசுவரம் அருகே படகில் பதுக்கியிருந்த ரூ.12 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

ராமேசுவரத்தில் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாசிஷ் கஞ்சா ஆயில்.

ராமேசுவரத்தில் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாசிஷ் கஞ்சா ஆயில்.

Updated on
1 min read

ராமேசுவரம்: ​ராம​நாத​புரம் மாவட்​டம் ராமேசுவரம் அருகே படகில் பதுக்கி வைத்​திருந்த ரூ.12 கோடி மதிப்பிலான போதைப் பொருட்​களை கடலோரக் காவல் படை​யினர் பறி​முதல் செய்​தனர்.

ராமேசுவரம் அருகே பாம்​பன் கடலோரப் பகு​தியி​லிருந்து இலங்​கைக்கு படகு மூலம் போதைப் பொருட்​கள் கடத்தப்பட உள்​ள​தாக இந்​திய கடலோரக் காவல் படைக்குத் தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, காவல் படை​யினர் நேற்று அதி​காலை ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, பாம்​பன் முந்​தல்​ முனை கடற்​கரை​யில் நாட்​டுப் படகில் மர்ம நபர்​கள் 4 பேர் கடத்​தல் பொருட்​களை ஏற்​றிக் கொண்​டிருந்​தனர். காவல் படை​யினரைக் கண்​டதும் அவர்கள் தப்பி ஓடினர்.

படகைச் சோதனை​யிட்​ட​தில் அதில் மறைத்து வைத்​திருந்த 9.5 லிட்​டர் ஹாசிஷ் எனப்​படும் கஞ்சா ஆயில் இருந்​தது. அதைப் பறி​முதல் செய்​து, இந்​தி​ய கடலோரக் காவல் படை​யின் மண்​டபம் முகா​முக்கு கொண்டு சென்​றனர்.

முதல்​கட்ட விசா​ரணை​யில் தப்​பியோடிய 4 பேரும் தங்​கச்​சிமடம் பகு​தி​யைச் சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய​வந்​துள்​ளது. பறி​முதல் செய்த கஞ்சா ஆயில் மதிப்பு ரூ.12 கோடி என கடற்​படை​யினர் தெரி​வித்​தனர். பின்​னர், கஞ்சா ஆயில் சுங்​கத் துறை நுண்​ணறி​வுப் பிரிவு அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. கடத்​தல்​​காரர்​களை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>ராமேசுவரத்தில் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாசிஷ் கஞ்சா ஆயில்.</p></div>
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் உடலுக்கு பாஜக, இந்து அமைப்பினர் அஞ்சலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in