காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: நகராட்சி இளநிலை உதவியாளர் தற்கொலை; காதலியும் விஷம் அருந்தி உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் ஊட்டி காந்தல் பகு​தியை சேர்ந்​தவர் பிர​சாந்த் (26). இவர் நெல்​லி​யாளம் நகராட்​சி​யில் இளநிலை உதவி​யாள​ராக பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், அவரது உறவினர்​கள் நேற்று முன்​தினம் பிர​சாந்த்தை தொலைபேசி​யில் அழைத்​தனர். அவர் அழைப்பை ஏற்​காத​தால் நகராட்சி அலு​வல​கத்தை தொடர்பு கொண்​டனர்.

அப்​போது, பிர​சாந்த் ஒரு வார​மாக அலு​வலகம் வரவில்லை என தெரி​வித்​துள்​ளனர்.இதையடுத்​து, நகராட்சி ஊழியர்​கள் பந்​தலூர் பஜாரில் அவர் தங்​கி​யிருந்த அறைக்கு சென்று பார்த்​தனர். கதவை தட்​டி​யும் திறக்​காத​தால் ஜன்​னலை திறந்து பார்த்​த​போது அறை​யில் இருந்த கம்​பி​யில் தூக்​கிட்ட நிலை​யில் பிர​சாந்த் சடல​மாக காணப்​பட்​டார். இது குறித்து அவர்​கள் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

விசா​ரணை​யில், பிர​சாந்த், காந்​தல் பகு​தியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்​ததும், அவரையே திரு​மணம் செய்து வைக்​கு​மாறு பெற்​றோரிடம் தெரி​வித்​தும், அவர்​கள் மறுத்​த​தால் விரக்​தி​யில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டதும் தெரிய​வந்​தது. பந்​தலூர் போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரிக்​கின்​றனர். இந்​நிலை​யில், பிர​சாந்த் இறந்த தகவல் ஊட்​டி​யில் உள்ள அவரது காதலிக்கு தெரிய​வந்​ததும் அவரும், விஷம் குடித்து தற்​கொலை செய்து கொண்​டார். ஊட்டி போலீ​ஸார் உடலை கைப்​பற்றி விசா​ரிக்​கின்​றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சீனாவில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 28 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in