​பாலியல் புகார் அளித்த பெண் மீது வன்கொடுமை வழக்கு: காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை

உயர் நீதி​மன்​ற மதுரை அமர்வு உத்​தரவு
​பாலியல் புகார் அளித்த பெண் மீது வன்கொடுமை வழக்கு: காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை
Updated on
1 min read

மதுரை: தூத்​துக்​குடியைச் சேர்ந்த பெண் ஒரு​வர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​குமரன் என்​பவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொந்​தரவு அளித்​தார்.

இது தொடர்​பாக போலீ​ஸில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைதுக் செய்​தனர். ஜாமீனில் வெளிவந்​ததும் என்​னைப் பழி​வாங்​கும் நோக்​கில், எனக்கு எதி​ராக தூத்​துக்​குடி சிப்​காட் காவல் நிலை​யத்​தில் வன்கொடுமை சட்​டத்​தில் புகார் அளித்​தார்.

இந்​தப் புகாரின் பேரில் என் மீது வன்கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் என்னை கைது செய்​வதற்​காக டிஎஸ்பி சுதிர் தவறான வாக்​குமூலங்​களை உரு​வாக்​கி​யுள்​ளார்.

இது தொடர்​பாக நான் புகார் அளித்​த​தால் விசா​ரணையை வேறு ஒரு டிஎஸ்​பிக்​கு, தூத்​துக்​குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்​றி​னார். புதிய டிஎஸ்பி விசா​ரணை நடத்​தி, என் மீதான புகார் உண்​மைக்கு புறம்​பானது என்று கூறி, வழக்கை முடித்​து​வைத்​தார்.

என் மீது தவறாக வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார் மீதும், வன்கொடுமைத் தடுப்​புச் சட்​டத்​தைத் தவறாக கையாண்ட டிஎஸ்பி சுதீர் மீதும் துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்க உத்தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

ஐ.ஜி. விசாரிக்க வேண்டும்: மனுவை நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி விசா​ரித்​தார். பின்​னர் நீதிப​தி, "மனு​தா​ரரின் புகார் குறித்து தென் மண்டல ஐ.ஜி. வி​சா​ரணை நடத்​தி, டிஎஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​" என்​று உத்​தரவிட்​டார்​.

​பாலியல் புகார் அளித்த பெண் மீது வன்கொடுமை வழக்கு: காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in