

தஞ்சாவூர்: தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சிறுவன் ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு துணையாக அவரது சகோதரியான 15 வயது சிறுமி மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
அப்போது, பணியில் இருந்த பயிற்சி மருத்துவரான சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த கோபிநாத்(35), அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அலறியதால், கோபிநாத் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். பின்னர் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை நடந்தி,பயிற்சி மருத்துவர்கோபிநாத் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஒரு செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோபிநாத், நீதிமன்றம் மூலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், தற்போது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.