போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்க முயற்சி: கேரள கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்தவர் கைது

சஞ்​சய் வர்மா

சஞ்​சய் வர்மா

Updated on
1 min read

சென்னை: பிராட்வே பகு​தி​யில் தனி​யார் செல்​போன் நிறு​வன மேலா​ள​ராக உள்ள வெற்​றிவேல் (34) கடந்த சில நாட்​களாக அந்த நிறு​வனத்​தின் பல்​வேறு கிளை​களில் ஒரே நபர் போலி ஆவணங்​களை சமர்ப்​பித்து சிம் கார்​டு​களை வாங்கி மோசடி​யில் ஈடு​பட்டு வரு​வதை அவர் கண்​டறிந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மதி​யம் பூக்​கடை பகு​தி​யில் உள்ள அந்த நிறுவன கிளைக்கு வந்த ஒரு​வர், தனது ஓட்​டுநர் உரிமத்தை வழங்கி 2 சிம் கார்​டு​களை வாங்க முயன்​றார்.

மேலா​ளர் வெற்​றிவேல், ஓட்​டுநர் உரிமத்தை ஆய்வு செய்​த​போது அது போலி​யாக தயாரிக்​கப்​பட்​டது என்​பது தெரிய​வந்​தது. மேலும் இதே நபர் ஏற்​கெனவே பலமுறை போலி ஆவணங்​களை பயன்​படுத்தி சிம் கார்​டு​கள் வாங்கி மோசடி செய்​திருப்​பதும் உறு​தி​யானது.

இதையடுத்து அவர் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார். தகவல் அறிந்து எஸ்​பிளனேடு போலீ​ஸார் விரைந்து சென்று அந்த நபரை காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

இதில் பிடிபட்​ட​வர் கர்​நாடக மாநிலம் பெங்​களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த சஞ்​சய் வர்மா (53) என்​பது தெரிய​வந்​தது. அவர் சமர்ப்​பித்த ஓட்​டுநர் உரிமம் போலி​யாக தயாரிக்​கப்​பட்​டதும், இதே​போல் திருச்​சி, மதுரை, சென்னை உள்​ளிட்ட பகு​தி​களில் போலி ஆவணங்​களை பயன்​படுத்தி சிம் கார்​டு ​கள் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​டதும் அம்​பல​மானது.

இதையடுத்து போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து சஞ்​சய் வர்​மாவை கைது செய்​தனர். அவரிட​மிருந்து 2 சிம் கார்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

மேலும் விசா​ரணை​யில், சஞ்​சய் வர்மா மீது கேரள மாநிலத்​தில் தம்​பானூர், தலச்​சேரி உள்​ளிட்ட காவல் நிலையங்​களில் கள்​ள நோட்டு தொடர்​பான வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​பதும் தெரிய​வந்​தது.

அதே​போல், சென்னை புனித தோமையர் மலை காவல் நிலைய திருட்டு வழக்கு உள்​ளது தெரிய​வந்​தது. கைது செய்​யப்​பட்ட சஞ்​சய் வர்மா நேற்று சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். மேலும், அவர் பயன்​படுத்​திய போலி ஆவணங்​கள் மற்​றும் சிம் கார்​டு​கள் மூலம் நடை​பெற்ற மோசடிகள் குறித்தும் வி​சா​ரணை நடை​பெறுகிறது.

<div class="paragraphs"><p>சஞ்​சய் வர்மா</p></div>
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் கூடுதல் கழிவறைகள் கட்ட அமைச்சர் அருண்ராஜ் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in