சென்னை | 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தங்கக்கட்டி கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் கைது

முகமது சமீர்

முகமது சமீர்

Updated on
1 min read

சென்னை: தங்​கக்​கட்டி கொள்ளை வழக்​கில் மூளை​யாக செயல்​பட்​ட​வர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை பிராட்வே பிர​காசம் சாலை​யைச் சேர்ந்​தவர் அங்​கித் திலிப்​மோர் (27). இவர்தனது அக்​கா​வின் கணவர் நடத்தி வரும் தங்​கம் உருக்​கும் மற்​றும் தங்​கத்​தின் தரத்தை சோதனை செய்​யும் கடையை நிர்​வகித்து வரு​கிறார்.

அந்த கடை சவு​கார்​பேட்டை மின்ட் தெரு​வில் உள்ள வணிக வளாகத்​தின் முதல் மாடி​யில் செயல்​பட்டு வரு​கிறது. கடந்த 1-ம் தேதி காலை வாடிக்​கை​யாளர் ஒரு​வர் 1.5 கிலோ தங்க நகைகளை உருக்​கிக் கொடுக்​கும்​படி கடை​யில் ஒப்​படைத்​துச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

அதன்​படி, அங்​கித் மற்​றும் கடை ஊழியர்​கள் தங்க நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக தயாரித்து வைத்​திருந்​தனர்.

அன்று மதி​யம் 3 பேர் கொண்ட முகமூடி கும்​பல் கடைக்​குள் புகுந்து கத்​தியை காட்டி அங்​கித் மற்​றும் அங்​கிருந்த 3 ஊழியர்​களை தாக்கி 1.5 கிலோ தங்​கக்​ கட்​டியை பறித்​துக்​ கொண்டு தப்பி ஓடியது.

அப்​போது அங்​கித், சக ஊழியர்​கள் மற்​றும் அரு​கில் உள்ள கடை ஊழியர்​கள் உதவி​யுடன் தப்​பி ஓடிய​வர்​களில் ஒரு​வரை விரட்டிப்பிடித்​தார். மற்ற இருவரும் தங்​கக் கட்​டி​யுடன் தப்​பினர்.

பிடிபட்ட நபர் யானைக்​க​வுனி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டார். விசா​ரணை​யில், அவர் திருச்சி மாவட்​டம், லால்​குடியைச் சேர்ந்த ஆறு​முகம் என்ற அருண் (23) என்​பது தெரிய​ வந்​தது.

அவரை கைது செய்த போலீ​ஸார், அவர் கொடுத்த தகவலின் ​பேரில், கூட்​டாளி​களான யானைக்​க​வுனி, கல்​யாணபுரத்​தைச் சேர்ந்த லோகேஷ் (24), அதே பகு​தி​யைச் சேர்ந்த ஹேராம் என்ற ரமணா (24) ஆகிய மேலும் இரு​வரை கைது செய்​தனர்.

இந்த கொள்​ளைக்கு திட்​டம் போட்​டுக் கொடுத்து மூளை​யாக செயல்​பட்ட மண்​ணடி அய்​யர் தெரு​வைச் சேர்ந்த முகமது சமீர் (26) என்​பவர் தலைமறை​வாக இருந்​து​ வந்​தார். அவரை தனிப்​படை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வந்​தனர். இந்​நிலை​யில், அவர் நேற்றுமுன்​தினம் கைது செய்​யப்​பட்​டார்.

<div class="paragraphs"><p>முகமது சமீர்</p></div>
ரூ.1.23 கோடியில் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இயங்கும் 6 படைப்பகங்கள்: தனியார் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in