சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தகராறில் கொத்தனார் கொலை: மேஸ்திரி கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தகராறில் கொத்தனார் கொலை: மேஸ்திரி கைது
Updated on
1 min read

சென்னை: கூலி பாக்கி தகராறில் கொத்​த​னார் கொலை செய்​யப்​பட்​டார்.

கட்​டிடத்​திலிருந்து தவறி விழுந்​த​தாக நாடக​மாடிய மேஸ்​திரியை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை நல்​லப்ப வாத்​தி​யார் தெரு​வில் வெங்​க​டாசலம் என்​பவருக்கு சொந்​த​மான இடத்​தில் புதிய வீடு கட்​டும் பணி நடை​பெற்று வரு​கிறது.

இந்த பணியில் பழைய வண்​ணாரப்​பேட்​டையை சேர்ந்த கோட்​டீஸ்​வரன் (46) என்​பவர் மேஸ்​திரி​யாக பணி​யாற்றி வந்​தார்.

கொருக்​குப்​பேட்டை மீனாம்​பாள் நகரை சேர்ந்த ஜெயக்​கொடி (55) என்​பவர் கொத்​த​னா​ராக வேலை செய்து வந்​தார்.

வாக்​கு​வாதம்

ஜெயக்​கொடிக்கு கோட்​டீஸ்​வரன் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி வைத்​திருந்​த​தாக கூறப்​படு​கிறது. அதை கேட்​ப​தற்​காக ஜெயக்​கொடி நேற்று கட்​டிட வேலை நடை​பெறும் இடத்​துக்கு சென்​றார். அப்​போது இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு கைகலப்​பாக மாறியது.

ஆத்​திரமடைந்த கோட்​டீஸ்​வரன், அங்​கிருந்த ரீப்​பர் கட்​டை​யால் ஜெயக்​கொடியை தாக்​கி​யுள்​ளார். இதில் தலை​யில் பலத்த காயம் அடைந்த ஜெயக்​கொடி மயங்கி விழுந்​தார்.

உடனடி​யாக அவருடன் வேலை பார்த்த தட்​சிணா​மூர்த்தி என்​பவர் ஜெயக்​கொடியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றார். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர் ஜெயக்​கொடி ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தார்.

போலீஸ் விசா​ரணை

இதுகுறித்து மருத்​து​வ​மனை​யில் இருந்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. முதலில் கட்​டிட வேலை​யின்​போது மேலே இருந்து தவறி விழுந்து ஜெயக்​கொடி உயி​ரிழந்​த​தாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், ஜெயக்​கொடி கூலி பாக்​கியை கேட்கச் சென்​ற​போது ஏற்​பட்ட தகராறில் கோட்​டீஸ்​வரன் ரீப்​பர் கட்​டை​யால் தாக்​கியதும், இதில் ஜெயக்​கொடி மயங்கி விழுந்து உயி​ரிழந்​ததும் தெரிய​வந்​தது. இதைத்​தொடர்ந்​து கோட்​டீஸ்​வரனை போலீஸார்​ கைது செய்​தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தகராறில் கொத்தனார் கொலை: மேஸ்திரி கைது
ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த இடத்தை மறந்த விவசாயி - ஓராண்டுக்கு பிறகு கிடைத்தும் கரையான் அரித்ததால் வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in